புதுடில்லி : டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மருமகன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டில்லி முன்னாள் முதல்வராக இருந்தவர் ஷீலா தீட்சித். இவரது மருமகன், வீட்டில் வேலை செய்த பணியாளரை அடித்து துன்புறுத்தியதுடன், வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்பட்டது. வீட்டு பணியாளரையும், அவரது மனைவியையும் 10 மாதங்களுக்கு மேலாக பார்க்கக் விடாமல் கொடுமைப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரச்னை போலீஸ் வரை சென்றதால், தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அவர் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து, பெங்களூரு விரைந்த டில்லி போலீசார், ஷீலாவின் மருமகனை கைது செய்தனர்