படங்கள் வெளியாகும் அன்றே இணையத்தில் விஷமிகள் அதனை பதிவேற்றிவிடுகிறார்கள். திருட்டு டிவிடி தொல்லை இன்னொரு பக்கம். கேபிள் டிவியில், தனியார் பேருந்துகளில் புதுப்படங்கள் அணிவகுக்கின்றன. இதையெல்லாம் தாண்டி தான் தமிழ் சினிமா உயிர் பிழைத்திருக்கிறது.
இந்தநிலையில் புதியதொரு வில்லனும் தமிழ் சினிமாவுக்கு முளைத்திருக்கிறான்.
ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தில் லைவ்வாக வீடியோவை திரையிட வழி இருக்கிறது. அந்த வழி மூலமாக படங்களை ஒளிபரப்பத் தொடங்கியிருக்கிறார்கள்.
அந்த புதிய தொழில்நுட்பத்தின்படி முதலில் கொடி படத்தை திரையிட்டவர்கள், அடுத்து தனி ஒருவன் படத்தை ஒளிபரப்பி திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்கள்.
கடும் நடவடிக்கை பாயவில்லையென்றால் தமிழ் சினிமாவின் நிலைமை சிக்கலாகிவிடும்.