புதுடில்லி: மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தொடர்ந்த அவதுாறு வழக்கை ரத்து செய்யக் கோரி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட், வழக்கை சந்திக்கும்படி உத்தரவிட்டது.
டில்லி கிரிக்கெட் சங்க முறைகேடு தொடர்பாக, அதன் முன்னாள் தலைவராக இருந்த, மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி குறித்து, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம் தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, கெஜ்ரிவால் மீதும், அவரது கட்சி, எம்.எல்.ஏ.,க்கள் மீதும், டில்லி கோர்ட்டில், கிரிமினல் அவதுாறு வழக்கையும், டில்லி ஐகோர்ட்டில், 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு, சிவில் அவதுாறு வழக்கையும் அருண் ஜெட்லி தொடர்ந்தார்.
டில்லி கோர்ட்டில் தொடரப்பட்ட கிரிமினல் அவதுாறு வழக்கை எதிர்த்து, கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை, டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், வழக்கு தொடர்பாக நேரில் ஆஜரானதால், கெஜ்ரிவால் உள்ளிட்டோருக்கு, டில்லி கோர்ட் ஜாமின் அளித்திருந்தது.
இந்த வழக்குகளை எதிர்த்து, கெஜ்ரிவால் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தன. அவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி வாதிட்டதாவது:
சிவில் அவதுாறு வழக்கில், டில்லி ஐகோர்ட் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையிலேயே, கிரிமினல் அவதுாறு வழக்கில் டில்லி கோர்ட் தீர்ப்பு அளிக்கும். சாட்சிகள், சம்பவங்களை அது கருத்தில் கொள்ளாது.
அதனால், டில்லி கோர்ட்டில் உள்ள கிரிமினல் அவதுாறு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். ஐகோர்ட்டில் உள்ள சிவில் அவதுாறு வழக்கை மட்டுமே நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள், பி.சி.கோஷ், யு.யு.லலித் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு, நேற்று அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
இந்த வழக்கில், கீழ் கோர்ட் மற்றும் டில்லி ஐகோர்ட் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தலையிட முடியாது. ஒரே நேரத்தில், கிரிமினல் மற்றும் சிவில் அவதுாறு வழக்குகளை நடத்துவதால், எந்தக் குழப்பமும் இருக்காது. அதனால், இரண்டு வழக்குகளையும் சந்திக்க வேண்டும்; இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
English Summary:
Finance Minister Arun Jaitley continued to demand the cancellation of the case, Delhi Chief Minister Arvind Kejriwal, who dismissed the case following the Supreme Court ordered the case to meet.