தாகா : வங்கதேசம் கப்பல்படையில் முதன்முறையாக நீர்மூழ்கி கப்பல் சேர்க்கப்பட உள்ளது. இதற்காக சீனாவிடம் இருந்து 2 நீர்மூழ்கி கப்பல்களை வாங்கியுள்ளது.
ரூ.1,370 கோடி செலவில்..
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசம், வங்க கடல் பகுதியில் அதிகளவு சர்வதேச கடல் எல்லையை மியான்மர் நாட்டுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. இங்கு பாதுகாப்பை பலப்படுத்த கப்பல்படையில் நீர்மூழ்கி கப்பலை சேர்க்க திட்டமிட்டது. இதற்காக முதல்கட்டமாக சீனாவிடம் இருந்து 1,370 கோடி ரூபாய் செலவில் இரு நீர்மூழ்கி கப்பலை வாங்கியுள்ளது.
அடுத்தாண்டு..
நபஜத்ரா மற்றும் ஜாய்ஜத்ரா என அந்த கப்பல்களுக்கு பெயரிடப்பட்டுள்ளது. இக்கப்பல்கள் அடுத்தாண்டு வங்கதேச கப்பல்படையில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்படும் என வங்கதேச கப்பல்படை அதிகாரி தெரிவித்தார். நேற்று சீனாவின் லியா நன் கப்பல் தளத்தில் நடந்த நிகழ்ச்சியில் வங்கதேச கப்பல்படை தளபதி நிஜாமுதின் அகமது, இதனை பெற்றுக் கொண்டார்.