புதுடில்லி : ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இன்று பேரணி செல்ல உள்ளன. ஊர்வலமாக சென்று இவர்கள் ஜனாதிபதியை சந்திக்க உள்ளனர்.
எதிர்க்கட்சிகள் பேரணி :
இன்று பார்லி., கூட்டத்தொடர் துவங்க உள்ள நிலையில், ரூ.500, 1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்ட விவகாரம் தொடர்பாக இருஅவையிலும் புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அத்துடன் அவைக்கு வெளியே, மத்திய அரசுக்கு எதிராக பேரணி நடத்தவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. ரூபாய் நோட்டு வாபஸ், வாடிக்கையாளர்கள் கையில் மை வைக்கும் விவகாரம் ஆகியவற்றிற்கு எதிராக பேரணியாக சென்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
மம்தா தலைமை :
மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் இந்த பேரணி நடக்க உள்ளது. இந்த பேரணியில் திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொள்ள உள்ளன. மகாராஷ்டிராவில் பா.ஜ.,வின் கூட்டணி கட்சியாக இருக்கும் சிவசேனாவும் இந்த பேரணியில் கலந்து கொள்ள உள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், மத்திய அரசுக்கு எதிரான திரிணாமுல் காங்கிரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இருப்பினும் ஜனாதிபதி மாளிகை நோக்கி செல்லும் இந்த பேரணியில் கலந்து கொள்ளாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.