சென்னையில்
நடைபாதை வியாபாரிகளை, 'பயோமெட்ரிக்' முறையில் கணக்கெடுக்க, மாநகராட்சி முடிவு
செய்துள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, நடைபாதை
வியாபாரிகள் பாதுகாப்பு
திட்டத்தை, சென்னையில் விரைந்து செயல்படுத்தவும், மாநகராட்சி
திட்டம் வகுத்துள்ளது.
சென்னையில், ஒரு
லட்சத்திற்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் உள்ளன.
பாரிமுனை, புரசைவாக்கம், மயிலாப்பூர், தி.நகர்,
வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில், நடைபாதை கடைகள் அதிகம் உள்ளன.
கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள், போக்குவரத்து மற்றும் சட்டம் - ஒழுங்கு போலீசார், இந்த கடைகளிடம் தொடர்ந்து மாமூல் பெறுவதால், இவற்றை
கட்டுப்படுத்த முடியவில்லை.
அரசாணை வெளியீடு
இந்நிலையில், 2014ல், தெருவோர வியாபாரிகள் பாதுகாப்பு திட்டத்தை, மத்திய
அரசு அறிமுகப்படுத்தியது. இதற்கான நிபந்தனைகள் மற்றும் வழிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு, அந்தந்த மாநில அரசுகள், அரசாணைகள் பிறப்பித்து, திட்டத்தை செயல்படுத்த
அறிவுறுத்தி இருந்தது.
இதன்படி, தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம், கடந்த ஆண்டு இந்த திட்டத்தை செயல்படுத்த
அரசாணை வெளியிடப்பட்டது. இதன்படி, மாநகராட்சிகளில் திட்டத்தை செயல்படுத்த, குழு அமைத்து, நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
இந்த அரசாணையின் படி, சென்னை மாநகராட்சி, முதல் கட்டமாக, நடைபாதை வியாபாரிகளை, 'பயோமெட்ரிக்' முறையில் கணக்கெடுத்து, பதிவுகள் தயாரிக்கவும்,
வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பில், சான்றிதழ் மற்றும் உரிமம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனம்
மூன்று வட்டாரமாக சென்னையை பிரித்து, இந்த திட்டம் செயல்படுத்தப்
பட உள்ளது. வடக்கு
வட்டாரத்தில், 25 ஆயிரம் வியாபாரிகளுக்கும், மத்திய வட்டாரத்தில், 35 ஆயிரம் வியாபாரிகளுக்கும், தெற்கு வட்டாரத்தில், 20 ஆயிரம் வியாபாரிகளுக்கும் முதல் கட்டமாக, இந்த உரிமம் வழங்கப்பட இருக்கிறது.
இதற்கான, 'பயோமெட்ரிக்' கணக்கெடுப்பு நடத்தும் தனியார் நிறுவனத்தை,
ஒப்பந்தம் மூலம் மாநகராட்சி தேர்வு செய்கிறது.
மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னை மாநகராட்சி, உலக வங்கி நிதி உதவியுடன், தி.நகரில் நடைபாதை வளாகம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இது ஒரு முன்மாதிரி திட்டம். ஆனால், மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, சென்னை நகரின் அனைத்து மண்டலங்களிலும் நடைபாதை வியாபாரிகளுக்கான வளாகம் அமைக்கப்பட உள்ளது.
தி.நகர் நடைபாதை வளாக திட்டத்திற்கு தியாகராயர் சாலை தேர்வு செய்யப்பட்டது. இதைபோல, மண்டலங்களில் மண்டல அலுவலரை தலைவராக கொண்டு, அமைக்கப்படும் நடைபாதை வியாபாரிகள் பாதுகாப்பு குழு, அந்தந்த மண்டலங்களில் நடைபாதை வியாபாரிகளுக்கான வளாகம் அமைக்க, தகுதியான இடத்தை தேர்வு செய்யும்.
உடனே அகற்றம்
மாநகராட்சி தற்போது கணக்கெடுப்பு நடத்தி உரிமம் வழங்கும் வியாபாரிகள், அந்த இடத்தில் கடை அமைத்து கொள்ளலாம். இந்த நடைமுறை அறிமுகமானால், சென்னையில் கண்ட இடங்களில் எல்லாம் நடைபாதை கடைகள் இருக்காது.
நடைபாதை கடைக்காரர்கள் உரிமம் பெற்று கடை நடத்துவதால், யாருக்கும் மாமூல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. 'பயோமெட்ரிக்' கணக்கெடுப்பு நடத்துவதால், கணக்கெடுப்பில் உள்ளவர்கள் மட்டும் நடைபாதை வளாகத்தில் கடை நடத்த அனுமதிக்கப்படுவர்.
மற்றவர்கள் கண்ட இடத்தில் கடை அமைத்தால், உடனடியாக அகற்றப்படுவர். இதன்மூலம் புதிய நடைபாதை கடைகள் அமைவதையும் தடுக்க முடியும்.
மாநகராட்சி நடைபாதை கடைகள் குறித்து, ஏற்கனவே மாதிரி கணக்கெடுப்பு நடந்து முடித்துள்ளது.
தற்போது, உதவி வருவாய் அலுவலர்கள் முன்னிலையில்,
'பயோமெட்ரிக்' முறையில் அந்த வியாபாரிகள்
பதிவு செய்யப்படுவர். இதை புகைப்படம் எடுத்து
மாநகராட்சி ஆவணமாக
தயாரித்து வைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குழுவில் இடம் பெறுவது யார்?
மண்டல அளவில் நடைபாதை வியாபாரிகளுக்கான பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த, குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழுவில் அரசியல் தலையீடு இல்லாத வகையில், மண்டல அலுவலர் தலைவராகவும், தொண்டு நிறுவனங்கள், நலச்சங்கங்கள் ஆகியோர்
உறுப்பினராகவும் இருப்பர்.
மேலும், அந்தந்த மண்டல நடைபாதை
வியாபாரிகள் ஒருங்கிணைந்து, அவர்களில் ஆறு பேரை தேர்வு செய்ய வேண்டும். இந்த ஆறு பேரும் குழு
உறுப்பினர்களாக செயல்படுவர். இக்குழு தான்,
மண்டலத்தில் எந்த இடத்தில் நடைபாதை வளாகம் அமைக்கலாம் என, ஒருமனதாக முடிவு செய்யும். இதன் மூலம் ஒரு சார்பு நிலை தவிர்க்கப்படும்.
மோசடி கும்பலுக்கு 'ஆப்பு':
தமிழகத்தில் மற்ற மாநகராட்சிகளில், மாநகராட்சிக்கு ஒரு குழு மட்டுமே அமைக்கப்படுகிறது. சென்னையில் மட்டுமே மண்டலத்திற்கு ஒன்று என மொத்தம்,
15 குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான சிறப்பு
அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நிலையான நடைபாதை கடைகள், தள்ளுவண்டி கடைகள், நடமாடும் கடைகள், மோட்டார் வாகனம்
மூலம் நடைபெறும் கடைகள் ஆகியவை
கணக்கெடுப்பில் சேர்க்கப்படும். ஒருவர் ஒரு கடை மட்டுமே நடத்த முடியும். கடை உரிமையாளர் கடை
நடத்துபவராக இருக்க வேண்டும்.
இந்த நிபந்தனைகளால், நடைபாதை கடைகளை வாடகைக்கு விட்டு பிழைப்பவர்களுக்கு, 'செக்' வைக்கப் படும். மாற்று திறனாளிகள் பெயரில் பெட்டி கடைகள் நடத்தும் மோசடி கும்பலுக்கும், 'ஆப்பு' வைக்கப்படும்.