புதுடில்லி : சுவிஸ் வங்கிகளில் வரும் 2018 செப்., மாதத்திற்கு பின் துவக்கப்படும் வங்கி கணக்கு விவரங்களை இந்தியாவிடம் அளிக்க சுவிஸ் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
பதுக்கல் பணம் :
சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகள் தங்களிடம் கணக்கு வைத்திருப்பவர்களின் விவரங்களை மிகவும் ரகசியமாகப் பாதுகாக்கின்றன. இதனால் கறுப்புப் பணம் பதுக்குவோரின் சொர்க்கபுரியாக சுவிஸ் வங்கிகள் உள்ளன. சுவிஸ் வங்களில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் விவரங்களை பலமுறை கோரப்பட்ட போதும் அது தற்போதுவரை நிலுவையில்தான் உள்ளது.
2019ல் வங்கி கணக்கு பரிமாற்றம் :
இந்நிலையில் மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சர்வதேச அளவில், தங்கள் நாட்டில் உள்ள இந்தியர்களின் வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை இந்தியாவுடன் பரிமாறிக்கொள்ள சுவிட்சர்லாந்து ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குப் பின் சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கணக்குகள் தொடர்பான விவரங்கள் மட்டுமே கிடைக்கும். 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில்தான் முதல் தகவல் பரிமாற்றம் நடைபெறும். இதேபோல இந்தியாவும் தன்னிடம் உள்ள சுவிஸ் நாட்டவர்கள் வங்கிக் கணக்கு விவரங்களை அந்நாட்டிடம் அளிக்கும். இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேள்விக்குறி :
இது கறுப்பு பணத்தை தடுக்க மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிக்கு வெற்றியாக கருதப்படுகிறது. எனினும், ஏற்கெனவே சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை பதுக்கிய இந்தியர்கள் குறித்த விவரங்கள் கிடைப்பது இப்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது.
English Summary:
In September 2018 the Swiss banks., A month after the start of a Swiss bank account details to the approval of India reported.