நாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கருப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். எனினும், இந்த நடவடிக்கையால் மக்கள் பீதியடையத் தேவையில்லை. மேற்கண்ட நோட்டுகளை இன்னும் 50 நாள்களுக்குள் வங்கிகளில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்றும், இன்னும் இரு வாரங்களுக்குள் அந்த நோட்டுகளை வங்கிகளிலும், அஞ்சல் நிலையங்களிலும் மாற்றிக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று மோடிக்கு உடனே பாராட்டு தெரிவித்தார் ரஜினி.
இதையடுத்து கமல் மோடிக்கு இன்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது:
மோடிக்கு சல்யூட். அனைத்துக்கட்சியினராலும் இது கொண்டாடப்படவேண்டிய ஒன்று. முக்கியமாக வருமானவரி கட்டுபவர்கள் இதைப் பாராட்டவேண்டும்.