மக்கள் படுகின்ற துயரத்திற்கு, பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை அசோக் நகரில் உள்ள வங்கியில் தன்னிடம் இருந்த பழைய 500 ரூபாய் நோட்டுகளை மாற்றி, 4500 ரூபாயை பெறுவதற்காக திருமாவளவன் வங்கிக்கு வந்திருந்தார்.
பொதுமக்களுடன் வரிசையில் நின்று ரூபாய் நோட்டுக்களை அவர் மாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க சில்லரை இல்லாமல் சிரமப்படுவதாகக் கூறினார்.
ரூபாய் நோட்டுக்களை மாற்ற மக்கள் படும் சிரமத்தை தான் நேரில் உணர்ந்துகொண்டதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.
மக்கள் படும் சிரமங்களுக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் திருமாவளவன் வலியுறுத்தினார்.
English Summary:
People are also suffering, as the VCK leader Thirumavalavan urged the Prime Minister to apologize.