கரூர் : அரவக்குறிச்சியில், பணப் பட்டுவாடா துவங்கிய நிலையில், மத்திய தேர்தல் செலவின பார்வையாளர் திடீரென மாற்றப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி, பணப் பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், வரும், 19ல் தேர்தல் நடக்கிறது. வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களில் விதிமீறல் இருக்கிறா என்பதை கண்காணிக்க, பீஹாரை சேர்ந்த மத்திய தேர்தல் செலவின பார்வையாளர் சில்ஆஷிஸ் நியமிக்கப்பட்டார்.
இவர், ஏற்கனவே நடந்த கடந்த பொதுத்தேர்தலின் போது, கரூர் மாவட்டத்தில் பணியாற்றியவர். அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகளின் பணப் பட்டுவாடா மற்றும் செலவின விபரங்ளை, மத்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்து, தேர்தல் ரத்து செய்ய காரணமாக இருந்தவர்.
தேர்தல் ஆணையம், இந்த தேர்தலுக்கான செலவின பார்வையாளராக, கடந்த சில நாட்களுக்கு முன் இவரையே நியமித்தது. தொடர்ந்து பணியாற்றி வந்த அவரை, திடீரென மாற்றியதால், புதியதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
மாற்றம்:
இதுகுறித்து, தேர்தல் அலுவலர்கள் கூறியதாவது: கடந்த பொதுத் தேர்தலில், தேர்தல் செலவின பார்வையாளர் சில்ஆஷிஸ் தலைமையிலான குழுவினர் பரிந்துரையில், தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
தற்போது அறிவிக்கப்பட்ட தேர்தலில் மீண்டும் செலவின பார்வையாளராக சில்ஆஷிஸ் நியமிக்கப்பட்டார். அவரின் பார்வைக்கு எவ்வித புகாரும் செல்லாமல் இருக்க, மாவட்ட அளவில் செயல்படும் அலுவலர்கள், ஆளுங்கட்சினருடன் கைகோர்த்து பணியாற்றி
வருகின்றனர். தேர்தல் நெருங்கும் நிலையில், அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகள் சார்பில், ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு பணப் பட்டுவாடா நடக்கிறது.
சில்ஆஷிஸ் இருந்தால்சிக்கல் ஏற்படும் எனக் கருதிய ஆளுங்கட்சியினர், தங்களுக்கு உள்ள டில்லி செல்வாக்கை பயன்படுத்தி, அவரை மாற்ற காய் நகர்த்தியதாக தகவல் பரவி வருகிறது. இதற்கிடையே, சில்ஆஷிஸ் மாற்றப்பட்டு, இவருக்கு பதிலாக, அஜய் தத்தார்த்ராயா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இது, பல்வேறு யூகங்களுக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
2 தொகுதிகளில் ரூ.1.58 கோடி பறிமுதல்:
தேர்தல் நடைபெற உள்ள, மூன்று தொகுதிகளிலும், பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், நேற்று முன்தினம் வரை, 1.58 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில், தேர்தல் நடைபெற உள்ள, தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க, பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் வரை, அரவக்குறிச்சி தொகுதியில், ஏதும் பறிமுதலாகவில்லை.
தஞ்சாவூர் தொகுதியில், 70.22 லட்சம் ரூபாய்;திருப்பரங்குன்றத்தில், 88.19 லட்சம் ரூபாய் ரொக்கம், இதுதவிர, 41 கிலோ வெள்ளி, நான்கு கிலோ தங்கம், 4,300 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.பறிமுதல் செய்த, 1.58 கோடி ரூபாயில், உரிய ஆவணங்களை காட்டியதால், 12.19 லட்சம்
ரூபாய்; 41 கிலோ வெள்ளி, 912 கிராம் தங்கம், மதுபானம் ஆகியவை, திரும்ப ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
தடபுடலாக விருந்து:
-தஞ்சாவூர் சட்டசபை தொகுதி தேர்தலில் பணியாற்ற வந்துள்ள, தன் தொண்டர்களுக்காக, தேர்தல் விதிமுறைகளை மீறி, தனியாகவே மெஸ் ஒன்றை திறந்து, மூன்று வேளையும் அமைச்சர் ஒருவர் தடபுடலாக விருந்து அளித்து வருகிறார்.
தஞ்சாவூரில், தேர்தல் பணியாற்றும் அமைச்சர்கள், தங்கள் ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கு உணவு, தங்கும் வசதி செய்து கொடுத்து, ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், கொஞ்சம் வித்தியாசமாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தன் தொண்டர்களுக்கு உணவு அளிக்க, தஞ்சாவூர் - - நாகை பை - பாஸ் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில், 'கீரின்சிட்டி மெஸ்' என, செட் ஒன்றை போட்டு, அங்கு, தொண்டர்களுக்கு, தினமும் பிரியாணி, மீன் குழம்பு, காலை டிபன் என, வழங்கப்பட்டு வருகிறது.
சமையல் செய்வதற்காக, வெளியூரில் இருந்து ஆட்கள் வேலைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். மெஸ் என்கிற பெயரில் தடபுடலாக விருந்து நடக்கிறது. அரிசி, பருப்பு, காய்கறிகள் என, மூட்டை கணக்கில் வாங்கி இருப்பு வைக்கப்பட்டுள்ளது.