டொரன்டோ : அமெ
ரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டிரம்ப் வெற்றியை நெருங்கி வருவதால், அவர் வெற்றி பெற்று அதிபர் ஆகிவிடுவாரோ என்ற அச்சம் அமெரிக்கர்கள் சிலரின் மனதில் எழுந்துள்ளது.
அமெரிக்கர்கள் மீண்டும் கனடாவுக்கு செல்ல தடை விதிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் பலரும் ஒரே நேரத்தில் கனடா குடியேற்ற இணையதளத்தை பார்வையிட்டதாலும், அதில் சந்தேகங்களை பதிவிட்டதால் முடங்கியது. அமெரிக்கா, கனடா, ஆசியாவை சேர்ந்த பலரும் கனடாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.cic.gc.ca/ என்ற இணையதளத்திற்குள் நுழைந்ததால், இணையதள சர்வரில் எரர் (error) ஏற்பட்டது. இந்த பிரச்னையை குடியேற்றத்துறை அதிகாரிகளால் உடனடியாக கண்டறிய முடியவில்லை.
குடியேற்ற இணையதளத்தில் இத்தகைய பிரச்னை ஏற்பட்டுள்ளதாக பலரும் டுவிட்டரில் குறிப்பிட்டதை அடுத்து, விபரம் அறிந்த அதிகாரிகள், இணையதளத்தை சீரமைக்கும் பணியில் இறங்கி உள்ளனர்.இதற்கு முன் கடந்த பிப்ரவரி மாதத்தில், அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவதற்கே அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாக கருத்துக்கள் வெளியானதால் அமெரிக்காவில் உள்ள அகதிகள் பலரும் கனடாவின் அட்லாண்டிக் கடற்கரை வழியாக தப்பிச் செல்ல முயற்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.