பிரதமர் நரேந்திர மோடியின் அதிரடி நடவடிக்கையால் கறுப்பு பண குவியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஒரு சிலரிடம் கணக்கில் வராத பணம் பெருகுவதால் அது விலைவாசியை அதிகப்படுத்துகிறது; சாதாரண மக்கள், நேர்மையாக சம்பாதிப்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதாவது கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் எந்த பொருளையும் எந்த விலை கொடுத்தும் வாங்கி விடுகின்றனர்;
இதனால் நேர்மையான மக்களுக்கு அந்த பொருள் கிடைப்பது குதிரைக் கொம்பாகி விடுகிறது. உதாரணத்திற்கு ஒரு வீட்டின் மார்க்கெட் விலை 30 லட்சம் ரூபாய் என்றால், கறுப்பு பணம் வைத்திருப்பவர் அதை 50 லட்சம் கொடுத்து கூட வாங்கத் தயாராக இருக்கிறார். இதனால் அந்த வீட்டின் விலை அதிகரிக்கப்பட்டு சாதாரண, நேர்மையான மக்களுக்கு எட்டாக் கனியாகி விடுகிறது. வீடு என்பது மட்டுமல்ல; சாதாரணமாக அன்றாடம் பயன்படுத்தப்படும் காய்கறி கூட இவர்களால் விலை அதிகரிக்கிறது; கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் பேரம் பேசாமல், கேட்ட விலையைக் கொடுத்து வாங்கிச் செல்வதால் சாதாரண நேர்மையான மக்கள் தங்கள் தேவைக்கு வாங்க முடியாமல் போய்விடுகிறது. இப்படி அன்றாடம் பயன்படுத்தப்படும் காய்கறி முதல் அத்தியாவசிய தேவையான வீடு வரை அனைத்துமே விலை தாறுமாறாக அதிகரிக்க கறுப்பு பண குவியலே பிரதான காரணம்.
தற்போது மோடியின் நடவடிக்கையால் இது கட்டுப்பாட்டுக்கு வந்தாலும், திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதைப் போல் மீண்டும் கறுப்பு பணத்தை ஒரு சிலர் குவிக்காமல் இருக்க வழி என்ன என்பதை இப்போது சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது.
வாசகர்கள் தங்களுக்கு தோன்றும் யோசனைகளை இந்த செய்திக்கான கருத்து பகுதியில் பதிவு செய்ய வேண்டுகிறோம். அவை தொகுக்கப்பட்டு செய்தியாக வெளிடப்படும்.
English Summary:
Prime Minister Narendra Modi's action put a stop to the black pile of cash. Some of price increases, with an increase of unaccounted money; Ordinary people suffer honestly earned. Which means that any material of black money holders are bought at any price,
so that honest people kompaki challenge is the availability of the material