இராக்கின் வடபுல நகரமான மொசூலில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இராக்கிய சிறப்பு படையினர் அவர்களுடன் கடும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அல் பகீர் பகுதியில் தாக்குதல் நடத்துவதற்குமுன், கடந்த வெள்ளிக்கிழமையன்று கைப்பற்றப்பட்ட அர்பஜியா மாவட்டத்தின் மீதான பிடியை தங்களுடைய படைகளை கொண்டு பலப்படுத்தி வருவதாக இராக்கி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ் குழுவினரின் தீவிரமான தாக்குதல் காரணமாக மொசூல் நகருக்குள் முன்னேறி வரும் இராக்கிய படைகளின் வேகம் குறைந்துள்ளது.
ஐ.எஸ் குழுவினர் சுரங்கப்பாதைகளை பயன்படுத்தி திடீர் ஸ்னைப்பர் துப்பாக்கிச்சூட்டிலும், தற்கொலை தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மொசூல் நகரில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மற்றும் இராக் சிறப்பு படையினர் இடையே தீவிர துப்பாக்கிச்சூடு |