கூடுதல் மருந்தாளுநர்கள் நியமிக்க வலியுறுத்தல்
குரோம்பேட்டை அரசு மருத்து வமனையில் போதிய அளவில் மருந்தாளுநர்கள் இல்லாததால் மருந்து, மாத்திரை வாங்க பலமணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது என நோயாளிகள் குற்றம்சாட்டு கின்றனர்.
சென்னை அடுத்த குரோம்பேட் டையில் உள்ள அரசு மருத்துவ மனைக்குத் தினமும் 1,400-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல் கின்றனர். 200-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். இங்கு 27 மருத்துவர்கள், 60 நர்சுகள் பணிபுரிந்து வரும் நிலையில், 7 மருந்தாளுநர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் மருந்து, மாத்திரை வாங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக நோயா ளிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும் போது, ‘‘குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பல்லாவரம், தாம்பரம், குரோம்பேட்டை உள் ளிட்ட சுற்றுப்பகுதிகளில் இருந்து முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந் தைகள் என தினமும் ஏராள மானோர் சிகிச்சைக்காக வருகின் றனர். போதிய அளவில் மருந்தாளு நர்கள் இல்லாததால் பலமணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால், சர்க்கரை நோய் உட்பட பல்வேறு நோயால் பாதிக்கப்பட்ட வர்கள் உரிய நேரத்துக்கு சாப்பிட முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, கூடுதலாக மருந்தாளு நர்களை நியமனம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றனர்.
‘‘குரோம்பேட்டையில் மொத்தம் 7 மருந்தாளுநர்கள் உள்ளனர். இதில் ஒருவர் பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றுப் பணிக்குச் சென்றுள்ளார். ஒருவர் மருந்துக் கிடங்கை கவனித்துக் கொள்கிறார். ஒருவர் பிரேதப் பரிசோதனை பணி செய்கிறார். மாலை, இரவு பணிக்கு தலா ஒருவர். வார ஓய்வு ஒருவர். ஆக ஒருவர் மட்டுமே பணியில் உள் ளார்.
இதனால் நோயாளிகளுக்கு மருந்து வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே கூடுதல் மருந்தாளுநர்களை நியமிக்க உரிய நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும்’’ என மருத்துவமனை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
மருத்துவமனை விளக்கம்
இது குறித்து மருத்துவமனை முதன்மை குடிமை மருத்துவ அலுவலர் கூறும்போது, ‘‘மருத் துவமனைக்கு நோயாளிக ளின் வருகை தினமும் அதிகரித்து வருகிறது. அவர் களுக்கு ஏற்ப மருந்தாளுநர்கள் இல்லை என்பது உண்மை தான். இதுபற்றி அரசின் கவனத் துக்குக் கொண்டு சென்றிருக் கிறோம். முடிவு அரசின் கையில்’’ என்றார்.