தாய்லாந்தின் காஞ்சனாபுரியில் வசிக்கிறார் வார்ரனன் சரசலின். 5 ஆண்டுகளுக்கு முன்பு இவரது காதலி, நோயால் இறந்து விட்டார். அவரது இழப்பை வார்ரனனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. காதலியின் நினைவாகவே வாழ்ந்தவருக்கு, ஒருநாள் வெள்ளை நாகப்பாம்பைப் பார்த்ததும் காதலி மறுபிறவி எடுத்து வந்திருக்கிறார் என்று தோன்றியது. நாகப்பாம்புடன் பழக ஆரம்பித்தார். விளையாட ஆரம்பித்தார். விரைவிலேயே இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறி விட்டனர். வார்ரனன் சொல்வதை எல்லாம் நாகப்பாம்பு கேட்டுக் கொண்டது. வார்ரனன் மிகவும் அன்பாகக் கவனித்துக்கொண்டார். நாகப்பாம்மைத் திருமணமும் செய்து கொண்டார். 10 அடி நீளத்துக்கு வளர்ந்துள்ள நாகப்பாம்புடன் உணவு மேஜையில் அமர்ந்து சாப்பிடுகிறார். இருவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒன்றாகப் பார்க்கிறார்கள். கேரம் விளையாடுகிறார்கள். ஒரே படுக்கையில் தூங்குகிறார்கள். தினமும் காரில் பல மைல் தூரம் பயணம் செய்கிறார்கள். பூங்கா, பொருட்காட்சி போன்ற மக்கள் கூடும் இடங்களில் வார்ரனனையும் நாகப்பாம்பையும் மக்கள் அடிக்கடி பார்க்கிறார்கள். திருமணம் ஆனதும் நாகப்பாம்புடன் தேனிலவுக்கு சிங்கப்பூர் சென்று வந்ததாக, வார்ரனன் ஃபேஸ்புக்கில் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். என்னதான் செல்லப் பிராணியாக இருந்தாலும் பாம்பு, பாம்புதான். ஏதாவது புரிதலில் தவறு நிகழ்ந்தால் ஆபத்து என்று பலரும் எச்சரிக்கிறார்கள். “புத்த மதத்தில் மனிதர்கள் இறந்த பிறகு விலங்குகளாக மறுபிறவி எடுப்ப தாக நம்புகிறோம். என் காதலியும் நாகப்பாம்பாகப் பிறந்திருக்கிறாள். ஒரு சாதாரண நாகப்பாம்பால் இவ்வளவு தூரம் அன்பாகவும் அமைதி யாகவும் நடந்துகொள்ள இயலுமா? என் காதலி என்பதால்தான் நான் பேசுவதைப் புரிந்துகொள்கிறாள். மிகவும் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறோம்” என்கிறார் வார்ரனன் சரசலின்.
ஐயோ... பாம்புடன் குடித்தனமா?
டொனால்ட் ட்ரம்ப் வெற்றி அமெரிக்காவில் மிகப் பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட தங்கள் எதிர்ப்பைக் காட்டி, போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். டெக்சாஸைச் சேர்ந்த ஒரு சிறுவன், பள்ளியில் விளையாட்டுக்கு நடத்தப்பட்ட தேர்தலில், ட்ரம்புக்கு வாக்களித்து இருக்கிறான். வீட்டில் மகிழ்ச்சியுடன் இந்தத் தகவலைச் சொன்னதும் அவனது அம்மா கடுங்கோபம் அடைந்தார். ஒரு பெட்டியில் சிறுவனின் துணிகளை வைத்து, ஓர் அட்டையில் ’ட்ரம்புக்கு வாக்கு செலுத்தியதற்காக என் அம்மா வெளியில் அனுப்பிவிட்டார்’ என்ற தகவலை எழுதி கையில் கொடுத்து, வெளியில் தள்ளிவிட்டார். அதிர்ந்து போன சிறுவன், கதறி அழுகிறான். அண்ணனை வெளியே அனுப்பியதைப் பார்த்து அவனின் தம்பியும் அழுகிறான். ‘ட்ரம்ப்பை ஆதரிப்பவன் இந்த வீட்டுக்கு வேண்டாம்’ என்கிறார் அம்மா. நீண்ட நேர அழுகைக்குப் பின், எதற்காக ட்ரம்புக்கு வாக்கு செலுத்தினாய் என்று அம்மா கேட்க, அவரைத்தான் அடிக்கடி தொலைக்காட்சியில் பார்த்தேன் என்று கூறியிருக்கிறான் சிறுவன். இந்த வீடியோ காட்சி வெளியாகி, அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
யார்தான் ட்ரம்புக்கு வாக்கு போட்டிருப்பார்கள்?