தமிழகத்தில் 3 தொகுதி தேர்தலில் தபால் ஓட்டுக்கள் கிடையாது என தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஸ் லக்கானி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஷ் லக்கானி, தேர்தல் பார்வையாளர்கள் ஒரு தொகுதிக்கு 39 பேர் கொண்ட குழு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இவர்கள் மூன்று ஷிப்டுகளாக பணி புரிவார்கள் என்றும், வாக்குப்பதிவின் போது 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு சதவிகிதம் அறிவிக்கப்படும் என்றார்.
3 தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களின் இடது கை ஆள்காட்டி விரலில் மை இருந்தால், அவர்கள் வாக்களிக்க முடியாது எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். வங்கிகளில் தவறுதலாக மை இடது கை விரலில் வைக்கப்பட்டாலும், அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
மேலும் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தேர்தலில் தபால் ஓட்டுக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய ராஜேஸ்லக்கானி அந்த தொகுதிகளில் வாக்குப்பதிவு நாளன்று அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.