புதுடில்லி: பழைய நோட்டுகள் செல்லாது என்ற அறிவி்ப்பு தொடர்பாக அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்க சோனியா தலைமையில் காங்., அவசர குழு கூட்டம் கூடியது. துணை தலைவர் ராகுல் உள்ளிட்ட மூத்த கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளார். பார்லிமென்டில், பாஜ அரசை ஸ்தம்பிக்க செய்வது பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.கறுப்பு பண விவகாரத்தில் மோடியின் அதிரடி நடவடிக்கையால் அதிர்ந்து போயுள்ள எதிர்கட்சியினர் ஒன்று கூட முடிவு செய்துள்ளனர். இதன் முதல் கட்டமாக காங்., உயர் மட்டக்குழு கூட்டம் இன்று டில்லியில் கூடியது.
நாளை பார்லி., குளிர் கால கூட்டத்தொடர் துவங்கவிருப்பதால் இந்த கூட்டத்தில் இந்த பண விவகாரத்தை பெரிதாக கிளப்ப காங்., திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான முக்கிய முடிவுகள் காங்., கூட்டத்தில் எடுக்கப்படும் என தெரிகிறது.