சென்னை:''ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக, பார்லிமென்டில், தி.மு.க., குரல் கொடுக்கும்,'' என, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறினார்.சென்னை அறிவாலயத்தில், அவர் அளித்த பேட்டி:ரூபாய் நோட்டுகள் தவிப்பை போக்காத, மத்திய - மாநில அரசுகளை கண்டித்து, வரும், 24ல், தமிழகம் முழுவதும், மாவட்ட தலைநகரங்களில், தி.மு.க., மனித சங்கிலி போராட்டத்தை நடத்த உள்ளது. ஜல்லிக்கட்டு, ரூபாய் நோட்டு விவகாரம், காவிரி விவகாரம் தொடர்பாக, பார்லிமென்டில் தி.மு.க., குரல் கொடுக்கும்.முதல்வர் ஜெயலலிதாவிடம், அவருடைய இலாக்காக்கள் இருந்த போதே, தமிழக அரசு செயல்படவில்லை. தற்போது, அந்த இலாக்காக்கள், அமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு சென்ற பிறகும், அரசு செயல்படவில்லை. எனவே, அரசு முடங்கியுள்ளது என, தொடர்ந்து கூறி வருகிறோ
ம்.இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
English Summary:
Jallikattu issue, Parliament, the DMK gives voice', as Stalin said the opposition leader.
ம்.இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
English Summary:
Jallikattu issue, Parliament, the DMK gives voice', as Stalin said the opposition leader.