புதுடில்லி;அனைவரும் தவறாமல் கூட்டத் தொடரில் பங்கேற்கவேண்டும் என ராஜ்யசபா எம்.பி.க்களுக்கு கட்சியின் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளதாக பார்லிமென்ட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓட்டெடுப்பு விவாதம்:
ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்து இருப்பதால் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில் காரசார விவாதம் நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் கடும் அமளியிலும் ஈடுபட்டு வருகின்றன. ராஜ்யசபாவில்,தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால் எதிர்க்கட்சிகள் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு குறித்து ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
ஒருவேளை ஓட்டெடுப்பு நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்கு வசதியாக தங்கள் கட்சி எம்.பி.க்கள் அனைவரும் ராஜ்யசபாவில் இருக்கவேண்டும் என்று பா.ஜ., விரும்புகிறது. இதனால் தங்களது எம்.பி.க்கள் அனைவரும்( இன்று ) 20ம் தேதி முதல் 23-ந்தேதி வரை அடுத்த 3 நாட்களுக்கு ராஜ்யசபா கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும் கட்சி கொறடா உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
English Summary:

Rajya Sabha MPs as everyone pankerkaventum regular session of parliament, local sources said that the party's whip orders.