புதுடில்லி : ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெற்றது உள்ளிட்ட விவகாரங்களை பார்லி.,யில் விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பார்லி., குளிர்கால கூட்டத் தொடர் இன்று துவங்க உள்ளது. இதில், ரூ.500, 1000 நோட்டுக்களை மத்திய அரசு வாபஸ் பெற்ற விவகாரம், காஷ்மீரில் பல மாதங்களாக நிலவும் பதற்ற நிலை உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி, இரு அவைகளிலும் புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. முன்னதாக ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணி செல்லவும் எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்நிலையில் எந்த விவகாரமாக இருந்தாலும் அதுபற்றி பார்லி.,யில் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பார்லி., தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு தர வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் அவை துவங்குவதற்கு முன், பார்லி., வளாகத்தில் இன்று காலை 10.15 மணியளவில் பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் பேச உள்ளார். இதிலும் எதிர்க்கட்சிகளுக்கு அமைதி காக்க வேண்டும் என மோடி வேண்டுகோள் விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காலை 10.30 மணியளவில் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.