புதுடில்லி: ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்ட விவகாரத்தில் பார்லிமென்டில் பிரதமர் பேச தயங்குவது ஏன் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இன்று பார்லிமென்ட் வளாகத்தில் ராகுல் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தினர்.
விசாரணை:
இதன் பின்னர் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கூறியதாவது: ரூபாய் நோட்டு வாபஸ் பெற்றதன் பின்னணியில் ஊழல் உள்ளதாக சந்தேகப்படுகிறோம். ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்படுவதற்கு முன்னர் பிரதமர் தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டார் என கேள்விப்படுகிறோம். இது குறித்து பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ரூபாய் நோட்டு வாபஸ் குறித்து பார்லிமென்டில் பேச பிரதமர் தயங்குவது ஏன்?
கேள்வி:
ரூபாய் நோட்டு வாபஸ் தொடர்பாக ஒத்தி வைப்பு தீர்மானத்துடன் விவாதம் நடத்த வேண்டும் என விரும்புகிறோம். ஆனால், நாங்கள்பேச அனுமதிக்கப்படுவோமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவாதத்தில் பிரதமர் பங்கேற்று பதிலளிக்க வேண்டும். மத்திய அரசின் நடவடிக்கை மக்களுக்கான நடவடிக்கை இல்லை. பணக்காரர்கள் யாரும் வரிசையில் நிற்கவில்லை என்றார்.
சம்மன் அனுப்புங்க:
பகுஜன் கட்சி தலைவர் மாயாவதி கூறுகையில், பிரதமருக்கு ஜனாதிபதி சம்மன் அனுப்பி வரவழைத்து, ரூபாய் நோட்டு வாபசால் எழுந்துள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்த வேண்டும். கறுப்பு பணத்திற்கு நாங்கள் எதிரானவர்கள். இதற்கு எதிரான போரில் மத்திய அரசுக்கு ஆதரவாக உள்ளோம். மத்திய அரசின் அறிவிப்புக்கு பின்னர் மக்கள் ஏடிஎம்களில் வரிசையாக காத்திருக்கின்றனர். மக்கள் அவதிப்படுகின்றனர். இதனை சமாளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
பார்லிமென்ட் நடந்து கொண்டிருக்கும் போது, பிரதமர் விவாதத்தில் பங்கேற்று பதிலளிக்க வேண்டும் எனக்கூறினார்.
English Summary:
Reluctance to speak in Parliament in the case of withdrawn currency note why the Prime Minister has said Rahul.