வீடு, நிலம், தங்கம் வைத்திருக்க அளவு நிர்ணயித்து கட்டுப்பாடு விதித்தால் கறுப்பு பணம் குவியாது என்பது சில வாசகர்களின் கருத்து
மீண்டும் கறுப்பு பணத்தை ஒரு சிலர் குவிக்காமல் இருக்க வழி என்ன என்பது குறித்து வாசகர்கள் தெரிவித்த சில யோசனைகள்:
அஸ்வின், சென்னை: எல்லா பரிவர்தனைகளும் ஆன்லைன் மூலமாக நடக்க வேண்டும். எல்லா மக்களுக்கும் வங்கியில் அக்கௌன்ட் இருக்க வேண்டும். அவர்களுக்கு டெபிட் கார்டு பயன்படுத்த கற்று கொடுக்க வேண்டும். அதிகபட்ச மதிப்பு ரூபாய் நோட்டுகளில் காலாவதி தேதி அச்சிடப்பட்டு இருக்க வேண்டும். காலாவதி தேதிக்கு பிறகு வங்கியில் மாற்றிக்கொள்ள வசதி செய்து தரப்பட வேண்டும்.
குடும்பத்தலைவி்க்கும் தண்டனை:
ரவி, தோஹா: கருப்பு பணம் வைத்துஇருப்பது கண்டுபிடிக்க பட்டால் குடும்ப தலைவி மீது வழக்கு பதிய வேண்டும்.
கேண்மைக்கோ சேகர், தர்மபுரி: அனைத்து அரசு மற்றும் தனியார் துறைகளில் பணம் செலுத்துவதும் சலுகைகள் பெறுவதும் ஆன்லைனில் செய்யவேண்டும். பான் எண், ஆதார் அல்லது வங்கி கணக்கு எண் இணைக்க வேண்டும். வியாபாரிகள் ஸ்மார்ட் கார்டு பயன்படுத்த வேண்டும். வருடம் ஒரு முறை வரி முறை மாற்றியமைக்கப்பட வேண்டும். அசையும், அசையா சொத்து குறிப்பிட்ட தொகைக்கு மேல் இருந்தால் முடக்க வேண்டும்.
ராஜன், கேரளா: லஞ்சம், ஊழல் சிறப்பு விசாரணை கோர்ட் அமைக்க படவேண்டும். அரசியல்வாதியை பொறுத்த மட்டில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டால் தேர்தலில் நிற்க தகுதி இல்லை என அறிவிக்க வேண்டும். அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது கையும் களவுமாக பிடிக்க பட்டால் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். 5,10,50 ரூபாய் நோட்டுகள் மட்டும் தான் புழக்கத்தில் இருக்க வேண்டும். பண பரிவர்த்தனை 5000 ரூபாய்க்கு மேல் இருந்தால் டெபிட்/கிரடிட் கார்டு அல்லது நெட் பாங்கிங் என்பது கண்டிப்பாக அமல் படுத்த வேண்டும்.
2 ஆயிரம் ரூபாய் நோட்டும் வாபசாக வேண்டும்:
வரதராஜன், சென்னை: சிறிது காலத்திற்கு பிறகு 2000ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற வேண்டும்
செந்தில், திருப்பூர்: கணக்கில் வராத ரூபாயை ராணுவத்திற்கென ஒரு பாங்க் அக்கவுன்ட் தொடங்கி அதில் டெபாசிட் செய்யச் செய்தால் பணம் வீணாகாமல் நாட்டிற்கு உதவும் .
கருப்பசாமி கேசவன், சென்னை: டாப்-அப் ரூபாய் அட்டைகளை வங்கிகள் வெளியிடனும். அதில் எக்ஸ்பயரி தேதி போடணும்.
கண்ணாயிரம், சென்னை: ரெஜிஸ்ட்ரார் அலுவலகம், ரீஜினல் டிரான்ஸ்போர்ட் அலுவலகம், வணிக வரித்துறை அலுவலகங்களில் இடைத்தரகர்கள் நீக்கப்படவேண்டும்
பெட்டிக்கடைக்கும் கட்டுப்பாடு:
என்றென்றும் இந்தியன், கொல்கத்தா: பெட்டிக்கடை முதற்கொண்டு. எந்த ஒரு வர்த்தகமும் எலெக்ட்ரானிக் கணக்கு பரிமாற்றத்தின் மூலமே நடக்க வேண்டும். ஒருவருடைய சம்பளம், பணவரவு ஆகியவற்றை கணக்கில் வைத்து, அவரின் சொத்துக்கள் 2 மடங்குக்கு மேல் இருந்தால் அந்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.
ஜாய், சென்னை: 2000 ரூபாய் நோட்டை தடை செய்ய வேண்டும். அதிக மதிப்புடைய பணம் 500 ஆக தான் இருக்க வேண்டும்.
சாம்பசிவம் சின்னக்கண்ணு, பாரிஸ்: கட்சி, அமைப்புகள், என் ஜி ஓ க்களின் தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கவில்லை என்றால் முடக்க வேண்டும். முறைகேடான செயல்களுக்கு அனுமதி கொடுக்கும் அதிகாரிகளுக்கு, முறைகேட்டில் ஈடுபட்டவர்களைவிட இரு மடங்கு தண்டனை கொடுக்க வேண்டும். வர்த்தகம் அனைத்தும் பத்தாயிரம் வரை ரொக்கமாகவும் மற்ற அனைத்தும் காசோலை, மற்றும் கார்டுகள் மூலம் இருக்க வேண்டும். வெளி நாடுகளில் இருந்து பணம் பெரும் அனைத்து என் ஜி ஓ க்களும் தணிக்கை அறிக்கை தெரிவிக்கா விட்டால் சொத்துக்கள் அரசுடமை ஆக்க வேண்டும்.
தர்மா, சென்னை: ரூபாய் நாட்டுக்கு காலாவதி தேதி போடணும்.
சினிமா பாணியில் தண்டனை:
இந்தியன் குமார், சென்னை: திரைப்பட பாணியில் லஞ்சம் வாங்குபவர்களை தண்டிக்க வேண்டும். மக்கள் வாக்குக்கு காசு வாங்காமல் நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
மது ஆறுமுகம், குமாரபாளையம்: அனைத்து நிறுவனங்களும் தங்களது வியாபாரம்/ பரிவர்த்தனைகளை காசோலை, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாகவே செய்ய வேண்டும். கல்லூரி, பள்ளி கல்வி கட்டணங்கள் காசோலை மூலமாகவே வாங்க வேண்டும். 500, 1000, 2000 ரூபாய் நோட்டுகளை குறைவாக அச்சிட்டு 50, 100, 20, 10 ரூபாய் நோட்டுகளை அதிக அளவில் அச்சடிக்க வேண்டும்.
மஸ்தான் கனி, அதிராம் பட்டினம்: மத்திய மாநில அரசு அலுவலகங்களில் முற்றிலும் ஆன்லைன் பரிவர்த்தனை கொண்டுவரனும்.
ொத்து வைக்க கட்டுப்பாடு:
ராம்குமார், மதுரை: ஒரு குடும்பத்துக்கு ஒருவர் பெயரில்தான் சொத்து. ஒருவர் இவ்வளவு கிராம் தங்கம்தான் வைத்திருக்கலாம். நகை, சொத்து வாங்கும்போது அது வங்கி கணக்கில் பிரதிபலிக்க வேண்டும்.
கேஎன்ஆர்., கனடா: தனி நபர் ஒருவருக்கு 2 குடியிருப்புகளுக்கு மேல் இருக்கக்கூடாது, காலி வீட்டு மனையாக 10,000 சதுரடிக்கு மேல் இருக்கக்கூடாது, விவசாயம் செய்யாத நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விவசாயம் செய்ய முன்வருபவர்களுக்கு படித்த இளைஞர்களுக்கு குறைந்த குத்தகை தொகைக்கு கொடுக்கப்படவேண்டும்.
ராஜேஷ் வாரன், திண்டுக்கல்: தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு, ரூ.5 லட்சம் ஆக்கவேண்டும். தனிநபர் வருமான வரியை குறைக்க வேண்டும்.
மாலினி, சென்னை: 5 வருடங்களுக்கு ஒரு முறையாவது பழைய ரூபாய் நோட்டுகளை செல்லா நோட்டுகளாக அரசு அறிவிக்க வேண்டும். 100 ரூபாய்க்கு மேல் ரூபாயின் மதிப்பு இருக்கவே கூடாது. ரொக்க பண பரிமாற்றம் தடுக்க வேண்டும்.
ரவிச்சந்திரன், காம்பியா: கரன்சி காலாவதி ஆகும் தேதி அச்சிடப்பட்டு காலாவதி காலத்திற்குள் வங்கியில் மாற்ற வேண்டும். மூன்றாண்டுக்கு ஒரு முறை ரூபாய் நோட்டின் கலரை மாற்ற வேண்டும்.
தமிழ், திருச்சி: தண்டனைகள் கடுமையானால் தவறுகள் குறையும். கறுப்பு பணம் வைத்திருப்பவர்களுக்கும், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் கடுமையான தண்டனையை உடனடியாக கொடுக்க வேண்டும்.
English Summary:
House, land, gold set a restriction imposed by the size of the black money kept in the opinion of some readers that never increased. Some people have a way of accumulating black money back to what readers