நாகர்கோவில்: மார்க்சிஸ்ட் அலுவலகங்களுக்கு வந்த மிரட்டல் கடிதத்தால், இன்று நாகர்கோவில் வரும் கேரள முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்கும் கூட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாய விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும், தனியார் வன பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கன்னியாகுமரியில் இருந்து டில்லிக்கு நாளை பிரசார பயணம் தொடங்குகிறது. பயணம் தொடர்பாக நாகர்கோவில் நாகராஜா திடலில் இன்று மாலை ௪:௦௦ மணிக்கு பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் கேரள முதல்வர் பங்கேற்கிறார்.கேரள முதல்வருக்கு மிரட்டல் விடுத்து தக்கலை, குலசேகரம், மார்த்தாண்டம் மார்க்சிஸ்ட் அலுவலகங்களுக்கு கடிதம் வந்துள்ளது. இதுபற்றி எஸ்.பி.,யிடம் அக்கட்சி நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். இதை தொடர்ந்து முதல்வர் வரும் பாதைகளிலும், பொதுக்கூட்டம் நடைபெறும் நாகராஜா திடலிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Wednesday, 9 November 2016
Home »
» கேரள முதல்வருக்கு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு