திருவனந்தபுரம் : நவம்பர் 30 வரை எந்த அபராத தொகையும் இல்லாமல் மக்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி கட்டணங்களை செலுத்திச் செல்லலாம் என கேரள முதல்வர் பிரனாயி விஜய் தெரிவித்துள்ளார்.
பழைய ரூ.500, 1000 நோட்டுக்கள் எங்கெல்லாம் நவம்பர் 14ம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு பட்டியல் வெளியிட்டுள்ளது. இருப்பினும் சில இடங்களில் பழைய நோட்டுக்களை வாங்க மறுப்பதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பழைய நோட்டுக்களை மாற்றி வங்கிக்கு சென்றால் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருக்க வேண்டி உள்ளது.
மக்களின் இத்தகைய சிரமங்களை குறைப்பதற்காக, மத்திய அரசு அறிவித்துள்ளபடி பழைய ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தி மாநில அரசுக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி மற்றும் கட்டண பாக்கிகளை எவ்வித அபராதமும் இல்லாமல் மக்கள் செலுத்தலாம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். நவம்பர் 30 ம் தேதி வரை மக்கள் கட்டணங்களை செலுத்தினால் மட்டும் போதும், அபராத தொகையை செலுத்த வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.