கலிவந்தப்பட்டு - ஒட்டியம்பாக்கம் இடையே மின் கோபுரம் அமைக்கும் பணி, புதிய சிக்கலால் மீண்டும் பாதிக்கப்பட்டு உள்ளது. நெல்லை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் உற்பத்தியாகும் காற்றாலை மற்றும் சூரியசக்தி மின்சாரத்தை சென்னைக்கு கொண்டு வர, மின் வாரியம் முடிவு செய்தது.
சாதகமான தீர்ப்பு : இதற்காக, துாத்துக்குடி - கயத்தாறில் இருந்து காஞ்சிபுரத்தில் உள்ள கலிவந்தப்பட்டு, ஒட்டியம்பாக்கம் இடையே மின் வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதில், கயத்தாறு - கலிவந்தப்பட்டு வழித்தட பணி முடிவடைந்து, மின்சாரம் கொண்டு வரப்படுகிறது. கலிவந்தப்பட்டு - ஒட்டியம்பாக்கம் வழித்தடம் அமைக்க, திருப்போரூர் அருகில் உள்ள வெண்பேடு, காயாறில், 12 மின் கோபுரம் அமைக்க வேண்டும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர்; மின் வாரியத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதனால், நீண்ட இழுபறிக்கு பின் அப்பகுதிகளில் மின் கோபுரம் அமைக்கும் பணியை, ஆகஸ்டில் மின் வாரியம் துவக்கியது. தற்போது, 11 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சிறுசேரி - ஒட்டியம்பாக்கம் இடையில், ஐந்து கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதனால், கலிவந்தப்பட்டு - ஒட்டியம்பாக்கம் வழித்தட பணி மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது; சென்னையில், 'ஓவர் லோடு' பிரச்னைக்கு தீர்வு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: கலிவந்தப்பட்டு - ஒட்டியம்பாக்கம் வழித்தடமான, 26 கி.மீ., துாரத்தில், 91 மின் கோபுரங்கள் நிறுவ வேண்டும். அதில், காயத்தாறு, வெண்பேட்டில், 12 கோபுரங்கள் நிறுவ எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
முடியும் நிலை : அந்த வழக்கை முடித்து, பிரச்னைக்குரிய இடங்களில் கோபுரம் அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. தற்போது, அந்த முழு வழித்தடத்தில் சிறுசேரி, ஒட்டியம்பாக்கம் அருகே, ஐந்து கோபுரங்கள் அமைக்க வேண்டும். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐந்து வழக்குகள் தொடரப்பட்டுள்ள தகவல் கிடைத்துள்ளது. எனவே, அந்த வழக்கு முடிந்த பின், கோபுரங்கள் அமைக்கும் பணி துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
முடக்க சதியா? : சென்னை, ராஜிவ்காந்தி சாலையை சுற்றியுள்ள பகுதிகளில், நில மதிப்பு அதிகம் உள்ளது. எனவே, அந்த இடங்களில், மின் வழித்தடம் அமைக்க, சிலர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது, முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனையில் உள்ளதால், கலிவந்தப்பட்டு - ஒட்டியம்பாக்கம் வழித்தடத்தை நிரந்தரமாக முடக்கும் வகையில், சிலர் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.