கோவை: தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவையில் நடைபெற்ற காங்கிரஸ் மண்டல மாநாட்டில் கலந்துகொண்டு சென்னைக்கு திரும்ப கோவை விமான நிலையம் வந்த ஈ.வி.கே,எஸ். இளங்கோவன் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து கோவை தனியார் மருத்துவமனையில் இளங்கோவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் இளங்கோவனுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். சிகிச்சை பெற்று வரும் இளங்கோவனை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

English summary:
Tamil Nadu Congress Committee former president EVKS Ilangovan admitted to private hospital for illness