சென்னை: பல ஆண்டு காலமாக சம்பள நாளை சந்தோஷமாக எதிர்பார்த்துக் காத்திருந்த மாத சம்பளதாரர்கள், ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பினால் ஐயோ சம்பள நாள் வந்திருச்சே எப்படி பணம் எடுக்கப் போகிறோம் என்ற கவலை மனதில் குடியேறி விட்டது. என்னதான் டெபிட் கார்ட் வைத்து பெரும்பாலானவற்றை செலவு செய்தாலும் சில அத்தியாவசிய தேவைகளுக்கு பணத்தை வங்கியில் இருந்து எடுத்துதான் ஆகவேண்டும் என்பதால் இன்று ஏடிஎம்களிலோ, வங்கியில் இருந்தோ பணத்தை எடுக்க முடியுமா என்ற கவலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 8ம் தேதி அன்று 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு பணப்புழகத்திலும் வங்கியின் நடைமுறைகளிலும் ஏராளமான கட்டுப்பாடுகள் வந்துள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்களும், சிறு வணிகர்கள், குறு தொழில் நிறுவனங்கள், கட்டிட ஒப்பந்தாரர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நாள்தோறும் கூலி கொடுக்க பணம் எடுக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ரொக்கமாக கொடுங்கள்:
நவம்பர் மாத சம்பளத்தை ரொக்கமாக கையில் வழங்க வேண்டும் என்று அரசு ஊழியர், ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதை அரசு ஏற்க மறுத்துவிட்டது. இன்று 14 லட்சம் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள், 7 லட்சம் ஓய்வூதியர்களுக்கு சம்பளம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். அதே நேரத்தில் போக்குவரத்து துறையில் 1.40 லட்சம் ஊழியர்களுக்கு சம்பள முன்பணம் ரூ. 3ஆயிரம் ரொக்கமாக இன்று வழங்கப்படுகிறது.
தப்பிவிட்ட அரசு ஊழியர்கள் :
இத்தனை நாட்களாக அரசு ஊழியர்கள், மாத சம்பளதாரர்கள் பெரும் சிக்கலை எதிர்கொள்ளவில்லை. காரணம் 8ம் தேதிதான் மோடி பணம் செல்லாது என்று அறிவித்தார். எனவே அரசு ஊழியர்கள் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளவில்லை. இன்று சம்பள நாள் என்பதால் ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்ததன் தாக்கத்தை அரசு ஊழியர்கள் இன்றுதான் உணருவார்கள் என்று கூறப்படுகிறது.
லட்சக்கணக்கான ஊழியர்கள் :
தமிழகம் முழுவதும் 14 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மாதந்தோறும் அவர்களது சம்பள பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்படுகிறது. அதேபோன்று, தமிழகம் முழுவதும் தனியார் கம்பெனிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் வேலை செய்யும் கோடிக்கணக்கான ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம், 1ம் தேதியே வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகிறது.இந்த சம்பள பணத்தை ஏடிஎம் மிஷின்கள் மூலமே பெரும்பாலான அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்கள் கடந்த மாதம் வரை எடுத்து வந்தனர்.
சம்பளத்தை எடுப்பதில் சிக்கல்:
வங்கிகளில் போதிய பணம் இல்லாத நிலையில் 90 சதவீத ஏடிஎம் மிஷின்கள் வேலை செய்யாததால், இவர்கள் அனைவரும் ஒரே நாளில் சம்பள பணத்தை எடுப்பதற்கு வங்கிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னையை வங்கிகள் எப்படி கையாளப்போகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
வங்கிகளில் கடும் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு காரணமாக அரசு மற்றும் தனியார் ஊழியர்களின் வங்கி கணக்கில் இருக்கும் சம்பள பணத்தை எடுப்பதில் திடீர் சிக்கல் எழுந்துள்ளது.
அத்தியாவசிய செலவுகள் :
மாதச் சம்பள ஊழியர்களை பொருத்தவரையில், வீட்டு வாடகை, மளிகை சாமான்கள், பால், அரிசி வாங்குவது, மின்சார கட்டணம் போன்ற பல்வேறு தேவைகளுக்காக தங்களின் சம்பள தினத்தை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். சம்பளம் போடப்பட்ட மறு கணமே, ஏடிஎம்களில் இருந்து அத்தியாவசிய தேவைகளுக்காக எடுத்துக்கொள்வார்கள்.
முடங்கிய ஏடிஎம்கள் :
தற்போது புதிய ரூபாய் நோட்டுகள் வைப்பதற்கான மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தாலும், போதுமான அளவு பணம் ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகளுக்கு வராததால், குறைந்த எண்ணிக்கையிலான ஏடிஎம்களில் குறைந்த அளவு பணமே நிரப்பப்படுகிறது. இதனால் பெரும்பாலான ஏடிஎம்கள் மூடப்பட்டு காணப்படுவதுடன், ஏடிஎம் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் கோரிக்கை:
வங்கிகளில் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு தொகையை 24 ஆயிரத்தில் இருந்து தளர்த்தி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. வங்கிகளுக்கு போதுமான பணம் வரத்து இல்லாததால், மேலே குறிப்பிட்டபடி உச்சவரம்பு உயர்த்தப்பட்டாலும் குறைந்த அளவே பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. இன்று அரசு ஊழியர்களுக்கு சம்பள பணம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு விடும் என்பதால் ரிசர்வ் வங்கி சார்பில், அனைத்து வங்கிகளுக்கும் கூடுதல் பணம் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் முடங்கியுள்ள ஏடிஎம் இயந்திரங்களை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் கோரிக்கையாகும்.
ஆன்லைன் கட்டணங்கள்:
வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல், நிரப்புவதற்கு, கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தலாம். ஆவின் நிறுவனத்தில், பாலுக்கான மாதாந்திர கட்டணத்தை, ஆன்லைனில் செலுத்தும் வசதி உள்ளது. மின் கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தலாம். சமையல் எரிவாயு நிறுவனத்தின் இணையதளங்களில் சென்று, ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தலாம். மொபைல் போன் கட்டணம் செலுத்த, ரீசார்ஜ் செய்ய, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகள் கொடுக்கலாம். மளிகைக்கடைகளில் டெபிட் கார்டுகள் மூலம் பொருட்களை மொத்தமாக வாங்கிக் கொள்ளலாம் என்றாலும் சில அத்தியாவசிய தேவைகளுக்கு கைகளில் தினசரி 200 ரூபாயாவது வேண்டும் என்பதால் ஒரு வாரத்திற்கு 2000 ரூபாயாவது ஏடிஎம்மில் இருந்து எடுக்க வேண்டும் என்பதே ஊழிர்களின் கவலையாக உள்ளது. பணப்பிரச்சினை எப்போது தீரும் என்பதே பெரும்பாலானோரின் கேள்வியாகும்

English summary:
Govt staffs all over the nation are worried over the cash withdrawal from banks and ATMs as salary day today.