சென்னை: தமிழகத்தில் டிசம்பர் 1-ம் தேதி முதல் மழைபெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருக்கிறது. அது, 48 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, வடமேற்கு திசை நோக்கி நகரும். இதன் காரணமாக டிசம்பர் 1- ம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யும் என்று கூறியுள்ளார். மேலும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தென்மேற்கு காற்று திசைமாறிய காரணத்தால் வடகிழக்கு பருவமழை தாமதமானதாக குறிப்பிட்ட அவர், மீனவர்கள் யாரும் வங்கக் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் உடனடியாகக் கரை திரும்புமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
வடகிழக்கு பருவமழை குறைந்துள்ளதால் சென்னை மற்றும் கடலோராப் பகுதிகளில் குளிர் காற்று வீசுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நாளை முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே சென்னையில் கடந்த டிசம்பர் 1-ம் தேதி ஒரேநாளில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது. 12 மணிநேரத்தில் சுமார் 272 செ.மி. அளவு மழை பதிவானது.

English summary:
Heavy rains forecast in costal areas from 1st december, said chennai metrological department.