நடிகை கவுதமியும், தானும் ஒரே நாளில் வெவ்வேறு விஷயங்கள் தொடர்பாக ஆனால் ஒரே முடிவு எடுத்ததாக நடிகர் கார்த்திக் குமார் தெரிவித்துள்ளார்.
நடிகை கவுதமி உலக நாயகன் கமல் ஹாஸனை பிரிவதாக நேற்று ட்விட்டரில் அறிவித்தார். 13 ஆண்டு கால உறவை முறித்துக் கொள்ளும் முடிவு தனது இதயத்தை நொறுக்குவதாக உள்ளது என்றார்.
இந்நிலையில் அலைபாயுதே, யாரடி நீ மோகினி, பசங்க 2 உள்ளிட்ட படங்களில் நடித்த கார்த்திக் குமார் நடிப்புக்கு முழுக்கு போடுவதாக ஃபேஸ்புக்கில் அறிவித்துள்ளார். கவுதமி வெளியிட்ட அறிவிப்பை பார்த்த கார்த்திக் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவரது ட்வீட்,
நானும் கவுதமியும் ஒரே நாளில் வெவ்வேறு விஷயங்கள் பற்றி ஒரே முடிவை கூறியதை நினைத்தால் வித்தியாசமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கும் என நம்பி நம்பி காலங்கள் ஓடியதை அடுத்து கார்த்திக் இந்த முடிவை எடுத்துள்ளார்.