சென்னை: திமுகவின் செயல் தலைவராக மு.க. ஸ்டாலினும் பொதுச்செயலராக துரைமுருகனும் விரைவில் நியமிக்கப்படக் கூடும் என அண்ணா அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலர் அன்பழகன் இருவரும் முதுமை காரணமாக பொதுநிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பதில்லை. அண்மையில் நடந்த இடைத்தேர்தல்களிலும் கூட கருணாநிதி பிரசாரம் செய்யவில்லை.
ஸ்டாலின் வீட்டில் ஆலோசனை :
இந்த நிலையில் திமுகவில் சில மாற்றங்கள் செய்யப்படக் கூடும் என கூறப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக திமுக பொருளாளர் ஸ்டாலின் வீட்டில் இது தொடர்பாக தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
செயல் தலைவர் ஸ்டாலின்?
தற்போதைய நிலையில் திமுக தலைவராக கருணாநிதியே நீடிப்பார்; அதே நேரத்தில் ஸ்டாலினுக்காக செயல் தலைவர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட உள்ளதாம்; அத்துடன் தற்போது முதன்மை செயலராக இருக்கும் துரைமுருகனை பொதுச்செயலராக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
பொருளாளர் பதவி யாருக்கு?
ஸ்டாலின் வசம் உள்ள பொருளாளர் பதவி எ.வ.வேலுவுக்கு கொடுக்கப்பட உள்ளது. துரைமுருகன் வகித்து வரும் முதன்மை செயலர் பதவி திண்டுக்கல் ஐ. பெரியசாமிக்கு கொடுக்கப்பட வாய்ப்புள்ளது என்கின்றன அண்ணா அறிவாலய வட்டாரங்கள்.
ஸ்டாலின்தான் தலைவர்..
. இதை உறுதிப்படுத்தும் விதமாக சென்னையில் நேற்று நடைபெற்ற நீதிக்கட்சி நூற்றாண்டு நிறைவு விழாவில், திமுகவின் அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என துரைமுருகன், பழ. கருப்பையா உள்ளிட்டோர் பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது
English summary:
Sources said that MK Stalin Will be appoint as DMK's acting leader.