மதுரை: மதுரையில் அல்கொய்தா அடிப்படைவாத அமைப்பைப் சேர்ந்த 4 பேரை தேசிய புலானாய்வு அமைப்பினர் ஞாயிறன்று கைது செய்தனர்.
அதில் கண்ணநேந்தல் 7-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த முகமது அயூப் என்பவரும் கைது செய்யப்பட்டார்.இன்று நால்வரும் பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
முகமது அயூப்பின் தந்தை முகமது தஸ்லீம், மதுரை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், முகமது அயூப் மதுரையில் காது கேளாதோருக்கான காதுகேட்கும் கருவி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். அவரை நேர்மையாக வளர்த்தேன்.
விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து செல்வதாக கூப்பிட்டு போனார்கள்.ஆனால் அவனை தொடர்பு கொள்ளமுடியாமல் அவனது செல்போன் அணைக்கப்பட்டுள்ளது. பின்னர், மதியம் பார்த்தால் என் மகன் தீவிரவாதி என செய்தி வருகிறது. என் மகன் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர். இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முகமது தஸ்லீம், என் மகனை கண்டிசனாக வளர்த்திருக்கிறேன். நிறைய கட்டுப்பாடுகளோடும் வளர்த்திருக்கிறேன். விசாரணைக்காக என்று கூப்பிட்டு போய் இப்போது தீவிரவாதி என்று கூறுகின்றனர் என்று முகமது அயூப் கண்ணீர் மல்க கூறினார்.
English summary:

Mohammad Ayub's father has approached Madurai court and saying that NIA has slapped false charges against his son. Ayub was arrested in Madurai recently.