நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முதல்வர் நாராயணசாமி வெற்றி பெற்றார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக அணி மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 17 தொகுதிகளில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி முதல்வராக பொறுப்பேற்றார்.
6 மாதங்களுக்குள் அவர் எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற வேண்டும் என்ற நிலையில், நெல்லித்தோப்பு எம்.எல்.ஏ. ஜான்குமார், தனது பதவியை ராஜிநாமா செய்தார். தொகுதிக்கு இடைத்தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது.
காங்கிரஸ் சார்பில் நாராயணசாமி, அதிமுக சார்பில் வேட்பாளர் ஓம் சக்திசேகர், நாம் தமிழர் கட்சி சார்பில் ரவி அண்ணாமலை, ஐக்கிய ஜனதாதளம் சார்பில் ஆறுமுகம் மற்றும் 4 சுயேச்சைகள் என 8 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. 3 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே, நாராயணசாமி முன்னிலையில் இருந்தார்.
இறுதிச் சுற்று நிலவரப்படி, நாராயணசாமி 11,144 வாக்குகள் வித்தியாசத்தில் ஓம்சக்தி சேகரை வென்றார். ஓம்சக்திசேகரை தவிர்த்து, பிற வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். நாராயணசாமிக்கு வெற்றிச் சான்றிதழை தேர்தல் அதிகாரி மலர்க்கண்ணன் வழங்கினார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற நாராயணசாமி, தனது முதல்வர் பதவியை தக்கவைத்துக் கொண்டார்.
இன்று பதவியேற்பு
நாராயணசாமி பேரவை உறுப்பினராக பதவியேற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் புதுச்சேரி பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் நாராயணசாமிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
வாக்குகள் விவரம்
மொத்த வாக்குகள் 31,362
பதிவானவை 26,898
நாராயணசாமி (காங்) 18,709
ஓம்சக்திசேகர் (அதிமுக) 7,565
ரவி அண்ணாமலை (நாம் தமிழர்) 90
ஆறுமுகம் (ஐக்கிய ஜனதாதளம்) 56
நோட்டா 334
English Summary : Narayanaswamy landslide victory in nellittop.Narayanaswamy standing for election as Chief Minister. 6 months to get him elected as the MLA, the MLA Nellithope Jankumar, resigned his post. Constituency by-election was held on the 19th.