சென்னை: தாம் அரசியலிலே இல்லை; என்னிடம் அரசியல் கேள்விகளை கேட்கவே வேண்டாம் என முக அழகிரி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலராக இருந்தவர் முக அழகிரி. கருணாநிதி, ஸ்டாலினுக்கு சமமாக திமுகவில் கோலோச்சினார் அழகிரி.
கருணாநிதிக்கு பிறகு தமக்குதான் திமுகவின் தலைமை பதவி கிடைக்க வேண்டும் எனவும் வியூகம் வகுத்து செயல்பட்டார் அழகிரி. ஆனால் அவரது அத்தனை வியூகங்களையும் ஸ்டாலின் வீழ்த்தினார்.
தற்போது திமுகவை விட்டே நீக்கப்பட்டு ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கிறார் அழகிரி. இந்த நிலையில் கருணாநிதியின் உடல்நிலையை முன்வைத்து அழகிரி தொடர்ந்து கோபாலபுரம் சென்று சந்தித்து வருகிறார்.
இதனால் அழகிரி மீண்டும் திமுகவில் தலையெடுக்கக் கூடும் என கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முக அழகிரி, தாம் அரசியலிலே இல்லை; தம்மிடம் அரசியல் தொடர்பான எந்த கேள்வியுமே கேட்க வேண்டாம் என கூறியுள்ளார்.
மேலும் திமுக தலைவர் கருணாநிதி உடல்நலமுடன் இருப்பதாகவும் அழகிரி கூறினார். அரசியல் தொடர்பான கேள்விகளே கேட்க வேண்டாம் என அழகிரி கூறிவருவதால் ஒட்டுமொத்தமாக அரசியலுக்கே அவர் முழுக்கு போட்டுவிட்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
English summary :
DMK leader Karunanidhi's eleder son MK Azhagiri said that he is not in politics on Tuesday.