திருச்சி: வடிவேலு போலீசாக நடித்த ஒரு படத்தில் ஒரு காமெடி சீன் வரும். அதில் ஒரு பெண்ணுக்கு மூன்று ஆண்கள் சண்டை போடுவார்கள் வடிவேலு பஞ்சாயத்து செய்து தீர்த்து வைக்க, திடீரென்று 4வதாக ஒருவர் வந்து அழைத்து சென்று விடுவார். அதே போல அடுத்தடுத்து ஒருசில வருடங்கள் இடைவெளியில் 5 ஆண்களை திருமணம் செய்த பெண் ஒருவர், தனது 5 கணவர்களுடனும் வாழாமல் இப்போது தனித்து விடப்பட்டுள்ளார்.
ஐந்து பேரை திருமணம் செய்த அந்த கில்லாடி பெண்ணின் பெயர் மாலதி. திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டியைச் சேர்ந்த குபேந்திரன் என்பவரின் மகளாவார். கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு ஸ்டீபன் என்பவருடன் திருமணம் முடிந்தது. பெண் குழந்தையும் பிறந்தது. குடும்பத்தோடு வேளாங்கண்ணிக்கு போனபோதுதான் விதி ஸ்டீபன் வாழ்க்கையில் விளையாடியது.
நவநீதத்துடன் தொடர்பு:
வேளாங்கண்ணியில் டீக்கடையில் வேலை பார்த்த நவநீதம் என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் கள்ளத் தொடர்பாக மாறியது. இதனால் ஸ்டீபனுக்கும் மாலதிக்குமிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் மாலதி ஸ்டீபனிடம் தனது குழந்தைகளை விட்டு விட்டு வேளாங்கண்ணிக்கு வந்து நவநீதத்துடன் குடும்பம் நடத்தினார்.
நாகையில் 3வது வாழ்க்கை:
நவநீதத்துடனான வாழ்க்கை கசக்கவே, நாகையை சேர்ந்த ஒருவருடன் மாலதிக்கு பழக்கம் ஏற்பட்டு, அவருடன் சிறிது காலம் குடும்பம் நடத்தினார். பின்னர் அவரும் மாலதியும் திருப்பூர் சென்று வேலை செய்தனர். அங்கு இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.
திருப்பூரில் 4வது திருமணம்:
மாலதி அங்கு ஒரு நிறுவனத்தில் வேலை செய்த வினோத் என்பவருடன் காதல் ஏற்படவே, அவரை நான்காவதாக திருமணம் செய்து கொண்டார். அவருடன் ஒன்றரை ஆண்டு குடும்பம் நடத்தினார். இருவரும் மன நிம்மதிக்காக திருச்சி சமயபுரம் கோயிலுக்கு சென்றனர். அப்போது வினோத் நண்பனான திருவெறும்பூர் மலைக்கோவில் பகுதி அசோக் என்பவரையும் அழைத்தார்.
5வது திருமணம்:
அசோக்கும், மாலதியும் அறிமுகமாகினர். வினோத்தை கழற்றி விட்ட மாலதி அசோக் வீட்டிற்கு வந்து ஒருவாரம் தங்கினார். அசோக்கை 5வதாக திருமணம் செய்து கொண்டார் மாலதி. இது குறித்த தகவலை எப்படியோ அறிந்த வினோத் மலைக்கோவில் வந்து அசோக்கிடம், மாலதியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கூறினார்.
மனம் கலங்காத மாலதி:
அப்போது அசோக்கிற்கும் வினோத்திற்கும் இடையே தகராறு ஏற்படவே, திருவெறும்பூர் போலீசில் புகார் செய்தனர். அப்போதுதான் மாலதி மேலும் பேரை திருமணம் செய்து கொண்ட விபரம் தெரியவந்தது. மாலதியின் கதையை கேட்ட போலீஸ் மற்ற 3 கணவர்களிடமும் கடந்த 2 நாட்களாக விசாரணை செய்தனர். இறுதியாக கணவன்கள் வினோத்தும் அசோக்கும் மாலதியை ஏற்று கொள்ள மறுத்து விட்டனர். சற்றும் மனம் கலங்காத மாலதி சொந்த ஊருக்கு போவதாக கூறவே, போலீசார் அறிவுரை கூறி மாலதியை அனுப்பி வைத்தனர்.
English summary:
Trichy woman has married 5 men and all have deserted her. She is now in police net.