புதுடில்லி: ரூபாய் நோட்டு வாபசிற்கு பிறகு, வரி வருவாய்கள் உயர்ந்துள்ளதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.
நன்றி:
இது தொடர்பாக டில்லியில் அவர் கூறியதாவது: புதுப்பணம் மறுசுழற்சி சீராக நடைபெறுகிறது. இந்த விவகாரத்தில் கலவரம் ஏற்படவில்லை. எங்கும் பிரச்னை ஏற்பட்டதாக தகவல் இல்லை. ரிசர்வ் வங்கியிடம் போதிய பணம் உள்ளது. அதிகளவு பணம் விடுவிக்கப்பட்டுள்ளது. நிறைய 500 நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. புதுப்பணம் அதிகளவு சுழற்சியில் வருகிறது. வங்கியில் பணம் கொடுக்கும் அளவு அதிகரித்துள்ளது. முக்கியமான புதுப்பணம் மறுசுழற்சி தற்போது துவங்கியுள்ளது. இது நன்றாக இருக்கும். எளிதாக முன்னெடுத்து செல்லும். ரூபாய் நோட்டு வாபசை ஆதரித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.
அதிகரிப்பு:
கடந்த டிசம்பர் 19ம் தேதி வரை நேரடி வரி 14.4 சதவீதமும், மறைமுக வரி 26.2 சதவீதமும்,மத்திய கலால் வரி 43.4 சதவீதமும், சுங்கவரி 6 சதவீதமும் அதிகரித்துள்ளது. ராபி சாகுபடி 6.3 சதவீதம் அதிகரித்துள்ளது. காப்பீடு செய்வதும், பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதும், சுற்றுலா மற்றும் மியூசுவல் இன்வெஸ்ட்மென்ட் செய்வதும் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
English Summary:
NEW DELHI: After return bill, Finance Minister Arun Jaitley said the rise in tax revenues.