பெர்லின் : ஜெர்மன் தலைநகர் பெர்லினில் மக்கள் கூட்டத்தில் திடீரென டிரக் புகுந்தததில் 12 பேர் பலியாயினர்; 48 பேர் படுகாயமடைந்தனர். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரக் மோதல் :
ஜெர்மன் தலைநகர் பெர்லினில் கிறிஸ்துமஸ் சந்தையில் பொருட்கள் வாங்கும் பகுதியில் மக்கள் குவிந்தனர். அப்போது கூட்டத்திற்குள் திடீரென டிரக்கை வேகமாக மோதச் செய்து தாக்குதல் நடத்தியதில் 12 பேர் பலியாயினர். 48 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும், பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது :
இத்தாக்குதலில் இருவர் ஈடுபட்டதாகவும், ஒருவன் உடல் நசுங்கி பலியானதாகவும், மற்றொருவன் கைது செய்யப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பெர்லின் நகரில் வசிப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
English summary:
Berlin: Germany's capital Berlin, the crowd suddenly surrounded truck killed 12 people; 48 people were injured. It may have been a terrorist attack, according to police sources.