ஆமதாபாத், கணக்கில் காட்டப்படாத 13 ஆயிரத்து 860 கோடி ரூபாய் கருப்பு பணம், தன்னிடம் இருப்பதாக அறிவித்து பின்னர் தலைமறைவான குஜராத் தொழிலதிபர் மகேஷ் ஷா, வருமான வரித்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தன்னிடம் உள்ள கருப்பு பணம் முக்கிய பிரபலங்களூக்கு சொந்தமானது என அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கணக்கில் காட்டப்படாத பணத்தை மாற்றுவோர் மற்றும் வரி செலுத்தாத நபர்களை கண்டறியும் வகையில், வருமான வரித்துறையினர், நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூவில் இரு அரசுப் பொறியாளர்களின் வீடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் காட்டப்படாத 5 கோடி ரூபாய் புதிய நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.
தாமாக முன்வந்து அறிவித்தார்
இந்நிலையில், வருமான வரித்துறையின் "ஐ.டி.எஸ். எனப்படும் வருமான அறிவிப்பு திட்டம்" அறிவிக்கப்பட்டதை அடுத்து, குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த தொழிலதிபர் மகேஷ் ஷா என்பவர், தன்னிடம் கணக்கில் காட்டப்படாத 13 ஆயிரத்து 860 கோடி ரூபாய் கருப்பு பணம் இருப்பதாக முதல் முறையாக அறிவித்தார். மேலும், அரசு விதிகளுக்கு உட்பட்டு வரி செலுத்த தயார் என்றும் அவர் கூறியிருந்தார்.
அதன்படி, முதல் தவணையான 975 கோடி ரூபாய் வரியை, கடந்த மாதம் 30-ம் தேதிக்குள் அவர் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், மகேஷ் ஷா, வரியை செலுத்த தவறியதுடன் தலைமறைவானார். இதனைதொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்டார்
இந்நிலையில் கடந்த 10 நாட்களாக தலைமறைவாக இருந்த மகேஷ் ஷா, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், வருமான வரித்துறை அதிகாரிகளால் செய்யப்பட்டார். தன்னிடம் உள்ள கருப்பு பணம் முக்கிய பிரபலங்களூக்கு சொந்தமானது என அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
English Summary : 13,860 crore black money: underground Mahesh Shah, Gujarat businessman arrested. 13 thousand 860 crore unaccounted black money, declaring that he had disappeared after the Gujarat businessman Mahesh Shah, was arrested by the income tax authorities. It belongs to the black money in its main popular personalities sensational confession that he has delivered.