
மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 12-ம் தேதி பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழக அரசின் தலைமை காஜி எழுதிய கடிதத்தில், ரபியுல் அவ்வல் பிறை நவம்பர் 30-ம் தேதி தெரிந்ததால் மிலாடி நபி டிசம்பர் 13-ம் தேதி கொண்டாடப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி டிசம்பர் 13-ம் தேதியை மிலாடி நபிக்கு பொது விடுமுறை தினமாக அறிவிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அதனை பரிசீலனை செய்த அரசு, டிசம்பர் 13-ம்தேதியை மிலாடி நபி பொது விடுமுறையாக அறிவிக்க முடிவு செய்தது. அதன்படி டிசம்பர் 12-ம் தேதிக்குப் பதில், டிசம்பர் 13-ம் தேதி செவ்வாய்க்கிழமை மிலாடி நபி பொது விடுமுறை என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
English Summary:
Chennai: Tamil Nadu government's public day of 13-th festival of the Prophet announced that Mladic. In this regard, on the orders of the governor