சென்னை: மறைந்த ஜெயலலிதாவின் உடலை சுமந்து சென்ற ராணுவ வாகனம், வெள்ளை சமாந்தி, ரோஜா உள்ளிட்ட சுமார் 2 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நேற்றிரவு 11.30 மணிக்கு மறைந்தார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல் கடந்த 75 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்துவிட்டார் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலிக்காகாக ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது. அங்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் அலங்கரிக்கப்பட்ட இறுதி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்திருந்த ராணுவ வாகனத்தில் தங்கப் பேழையில் ஜெயலலிதாவின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
இந்த ராணுவ வாகனத்தை அலங்கரிக்க கோயம்பேடு பூ மார்க்கெட்டிலிருந்து வெள்ளை சாமந்தி, ரோஜா உள்ளிட்ட 2 டன் மலர்கள் பயன்படுத்தப்பட்டன. 40 ஊழியர்கள் 10 மணி நேர உழைப்பில் பூ அலங்காரம் தயார் செய்தனர். பூக்களை மேலும் அலங்கரிக்கும் வகையில் தண்ணீர் விட்டான் என்று அழைக்கப்படும் அஸ்பாரகஸ் , டெய்ஸி பூக்கள் பயன்படுத்தப்பட்டன.

English summary:
Over two tonne of flowers from several destinations were used by about 40 workers who worked for 10 hours to prepare the Army truck and gun carriage for the final journey of Jayalalithaa.