சென்னை,
22 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையை புயல் மிரட்டியுள்ளது.
தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வர்தா புயலாக மாறியுள்ளது. இந்த புயல் சென்னைக்கு மிக அருகே இன்று கரையை கடக்கிறது. 22 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையை புயல் தாக்குகிறது. இதற்கு முன்பு 1994- ம் ஆண்டு அக்டோபர் 31-ந்தேதி சென்னையை புயல் நேரடியாக தாக்கியது. அப்போது மணிக்கு 116 கிலோ மீட்டர் முதல் 132 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. அன்றைய ஒரே நாளில் சென்னையில் 24 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. 1994-ம் ஆண்டை போல தற்போது வர்தா புயல் சென்னையை தாக்குகிறது.
2010-ம் ஆண்டு ஜல் புயல் கரையை கடந்தது. ஆனால் அப்போது பாதிப்பு இல்லை. 2012-ம் ஆண்டு நிலம்பு புயல் சென்னையை அடுத்த மகாபலிபுரம் அருகே கரையை கடந்தது. இந்த இரண்டு புயலாலும் சென்னைக்கு பாதிப்பு இல்லை. தற்போது 22 ஆண்டுகளுக்கு பிறகு வர்தா புயல் சென்னையை தாக்குகிறது.
300 கி.மீட்டர் தூரம் வரையில் ‘வார்தா’ புயல்
சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
வார்தா புயல் 300 கிலோ மீட்டர் நீளத்துக்கு பந்து போல் சுழன்று வருகிறது. இதன் வெளிவட்டம் 40 கிலோ டயாமீட்டர் அளவுக்கு உள்ளது.
புயல் கரையை நெருங்குவதற்கு முன்பு பலத்த காற்றுடன் மழை பெய்யும். இதன் தாக்கம் வடதிசையில் 100 கிலோ மீட்டர் தூரத்துக்கும் உள்ளது. இதனால் தென் திசையில் 100 கிலோ மீட்டர் தூரத்துக்கும் உள்ளது. இதனால் பலத்த காற்றுடன் மழை பெய்யும். புயல் ஒருமுறை கரையை தொடும்போது அதன் மறுபகுதி கரையை கடந்து செல்ல சுமார் 2 மணி நேரம் பிடிக்கும். புயல் 18 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது. சில சமயம் 13 கிலோ மீட்டர் அல்லது 10 கிலோ மீட்டர் என வேகத்தின் அளவு மாறும். இது வலுகுறையாமல் புயலாகவே கரைக்கு வருவதால் சேதம் மிக அதிகமாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.