நெல்சன் - 2-வது ஒருநாள் போட்டியிலும் வங்காள தேசம் தோல்வியடைந்தது. இதனால் நியூசிலாந்திடம் 0-2 என தொடரை இழந்துள்ளது.
நியூசிலாந்து 251 ரன்:
நியூசிலாந்து - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நெல்சனில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காள தேசம் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் கப்தில் 0 ரன்னிலும், லாதம் 22 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த கேப்டன் வில்லியம்சன் 14 ரன்னில் வெளியேறினார். ஆனால் 4-வது வீரராக களம் இறங்கிய நெய்ல் ப்ரூம் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அத்துடன் 109 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இவரது சதத்தால் நியூசிலாந்து அணி சரியாக 50 ஓவரில் 251 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. வங்காள தேசம் அணி சார்பில் அதிகபட்சமாக மோர்தசா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
நியூசிலாந்து வெற்றி:
பின்னர் 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் இம்ருல் கெய்ஸ் 59, அடுத்து வந்த சபீர் ரஹ்மான் 38 ரன்கள் அடித்தாலும், அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற வங்காள தேசம் 42.4 ஓவரில் 184 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 26-ந்தேதி நடைபெற்ற முதல் போட்டியில் ஏற்கனவே 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்ததால் நியூசிலாந்து அணி தொடரை 2-0 எனக்கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி நாளை நடக்கிறது.
English Summary:
Nelson - Bangladesh 2nd ODI match failed. The 0-2 series loss to New Zealand.