புதுடெல்லி: ‘‘எப்போதுமே புயலின் 2வது தாக்குதல் மிக கடுமையாக இருக்கும்’’ என்று வானிலை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். டெல்லி வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக பணியாற்றியவர் லக்ஷ்மண் சிங் ரத்தோர். இவர்தான், பாய்லின் மற்றும் ஹூத்ஹூத் புயலை குறித்து சரியாக கணித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டவர். இதனால் முன்கூட்டியே தேவையான இடங்களுக்கு, தேசிய பேரிடர் படையினர், பாதுகாப்பு படையினர் மற்றும் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். பிரச்னைகள் உடனுக்குடன் சரி செய்யப்பட்டு, போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.
பேரிடர் காலங்களில் போக்குவரத்தை சீர்செய்வதும், மீட்பு பணிகளை மேற்கொள்வதும்தான் மிக முக்கியமான நடவடிக்கை. போக்குவரத்து சீர் செய்வதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுதல், பாதிக்கப்பட்டவர்களை வேறு இடங்களுக்கு அழைத்து செல்லுதல் போன்வற்றை மேற்கொள்ள முடியம். தற்போது சென்னையில், வர்தா புயல் கடும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளது. இதனால் சென்னை நகரம், துவம்சம் ஆனதுபோல் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. ஆனால், இப்புயலின்போதும் வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் முன்கூட்டியே, பாதிப்புகள் குறித்து எச்சரித்திருந்தனர். இதனால்தான் முந்தையப் புயலைப் போலவே நேற்றும் சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்புதான் நாடாப் புயல் சென்னைக்கு அருகே கரை கடந்து சென்றது. எனினும் அப்புயல் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
ஆனால் நாடாப் புயல் ஏற்படுத்தாத பாதிப்பை, வர்தா புயல் ஏற்படுத்திச் சென்றுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய நிபுணர் லக்ஷ்மண் சிங் ரத்தோர் கூறியதாவது: ஒவ்வொரு புயலுக்கும் 2 பகுதிகள் இருக்கும். முதல் பகுதி என்பது, முன்புறம் இருக்கும் மேகங்கள். இவை கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்வித்து கரை கடந்து சென்றுவிடும். ஆனால், அதற்கு அடுத்ததாக மிக சக்திவாய்ந்ததாக இருக்கும், புயலின் மையப்பகுதி சுமார் ஒன்று முதல் 2 மணி நேர இடைவெளிக்கு பின்னர்தான் மீண்டும் கரையை தாக்கும்.
இந்த 2வது பகுதியின் தாக்கம், மிக கடுமையாக இருக்கும். இது நேரடியாக தரைப்பகுதிக்கு வந்துதான் மழை பெய்ய வைக்கும். அதேபோல், காற்றின் வேகத்தையும் மிக கடுமையாக கொண்டு வரும். அதுபோன்றுதான் இப்போது நாடாப் புயலை தொடர்ந்து, வர்தா புயல் பாதிப்பை ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளது. இதுபோன்ற பெரிய மேகத்திரள் கூட்டங்களை சரியாக கவனித்து முன்னெச்சரிக்கைகளை விட வேண்டியது மிக அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.
English Summary:
New Delhi: '' Storm of the 2nd Assault always will be very hard, '' said the weather expert. Laxman Singh Rathore, who was the director of the meteorological center in Delhi. He, on Boyle's and huthut storm predicted exactly, step up precautionary measures.To advance the necessary places, the National Disaster soldiers, security forces and soldiers were deployed. Fixed problems with instant, transportation ameliorated.