சென்னை : வர்தா புயல் சென்னையை வேகமாக நெருங்கி வருவதால் பாதுகாப்பு கருதி 4 மாவட்டங்களில் 4622 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கடப்பது எப்போது?:
சென்னைக்கு அருகே மையம் கொண்டுள்ள வர்தா புயல் பிற்பகல் 2 மணி முதல் 5 மணிக்குள் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பழவேற்காடு மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே இந்த புயல் கரையை கடக்கும் என்பதால் பாதுகாப்பு கருதி சென்னை, கடலூர், திருவள்ளூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களிலும் கடலோரம் வசிக்கும் 4622 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வர்தா புயலால் வடசென்னை கடுமையாக பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இதுவரை சென்னையில் பல இடங்களில் சாலைகளில் மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடல்சீற்றம் தொடர்ந்து அதிகரித்துள்ளதால் கடலூர், புதுச்சேரியில் கடற்கரையோர சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
English Summary:
Chennai :varta storm fast approaching 4622 people have been evacuated to the safety of the 4 counties.