மும்பை - மும்பை டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ், 36 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
இந்தியா ரன் குவிப்பு
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 400 ரன் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 631 ரன் குவித்தது. கேப்டன் வீராட் கோலி இரட்டை சதமும் (235 ரன்), முரளிவிஜய் (136), ஜெயந்த்யாதவ் (104) ஆகியோர் சதமும் அடித்தனர். ஆதில் ரஷீத் 4 விக்கெட் கைப்பற்றினார். 231 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2- வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து நேற்று முன்தினம் 4 - வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன் என்ற மோசமான நிலையில் இருந்தது.
இங்கிலாந்து திணறல்
ஜோரூட் 77 ரன் எடுத்தார். பேர்ஸ்டோவ் 50 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அஸ்வின், ஜடேஜா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். நேற்று 5 - வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க மேலும் 49 ரன் தேவை. கைவசம் 4 விக்கெட் என்ற நிலையில் இங்கிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது. இங்கிலாந்தின் எஞ்சிய 4 விக்கெட்டை எளிதில் கைப்பற்றினால் இன்னிங்ஸ் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இந்திய அணி பந்துவீச்சை தொடர்ந்தது. அஸ்வினின் அபாரமான பந்து வீச்சால் இங்கிலாந்து அணி தொடர்ந்து திணறியது.
அஸ்வின் அபாரம்
நன்றாக ஆடி வந்த போஸ்டோவ் 51 ரன்னில் அவரது பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். அதை தொடர்ந்து வோக்ஸ் 107, ஆதில் ரஷித் (2), ஆண்டர்சன் (2) ஆகியோரின் விக்கெட்டையும் அஸ்வின் கைப்பற்றி முத்திரை பதித்தார். இங்கிலாந்து அணி 55.3 ஓவர்களில் 195 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 36 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அஸ்வின் 55 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார். இந்த டெஸ்ட் முதல் இன்னிங்சில் அவர் 6 விக்கெட் கைப்பற்றி இருந்தார். ஜடேஜாவுக்கு 2 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார், ஜெயந்த் யாதவ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.
தொடரை கைப்பற்றியது : இந்த வெற்றி மூலம் வீராட் கோலி தலைமையிலான இந்திய அணி 5 டெஸ்ட் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டில் 246 ரன் வித்தியாசத்திலும், மொகாலியில் நடந்த 3 - வது டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் வென்று இருந்தது. மும்பை டெஸ்டில் ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் இந்தியா தொடரை வென்றது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5- வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.
கபில்தேவ் சாதனையை முறியடித்த அஸ்வின்!
மும்பை டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெறுவதற்கு அஸ்வினின் அபாரமான பந்து வீச்சே காரணம். நேற்று முன்தினம் 2 விக்கெட் கைப்பற்றிய அவர் நேற்று மேலும் 4 விக்கெட் வீழ்த்தினார். அவர் 55 ரன் கொடுத்து 6 விக்கெட் எடுத்தார். அவர் முதல் இன்னிங்சில் 112 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றி இருந்தார். இந்த டெஸ்டில் அஸ்வின் 12 விக்கெட் கைப்பற்றி முத்திரை பதித்தார்.
மேலும் அஸ்வின் 24-வது முறையாக 5 விக்கெட்டை எடுத்தார். இதன்மூலம் அவர் கபில்தேவ் சாதனையை முறியடித்தார். அதிகமுறை 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்த 3 - வது இந்திய வீரர் அஸ்வின் ஆவார். கும்ப்ளே 35 தடவையும், ஹர்பஜன் 25 முறையும் 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்து முதல் இரண்டு இடங்களில் உள்ளனனர்.
English Summary : 4th Test: England won the series, beating India: Kapil Dev's record of breaking the clinch Ashwin.Mumbai - Mumbai, India in a Test match innings and 36 run win by a comfortable margin. England defeated and captured the series.
India scoring
India - England 4th Test teams vankate Mumbai was held at the stadium. England first innings 400 runs scored. India first innings scored 631 runs. Captain virat goalie double centuries (235 run), murali vijay (136), jeyantyatav (104) and centuries. Adil Rashid captured 4 wickets. 2nd innings 231 runs behind England who played yesterday, 4 - 182 for the loss of 6 wickets at the end of the day run time was in the worst condition.