லண்டன்: இங்கிலாந்து அரசு வெளியிட்டுள்ள புதிய 5 பவுண்ட் கரன்சி நோட்டில் மிருக கொழுப்பு தடவப்பட்டுள்ளது என்பதால், அவற்றை நன்கொடையாக பெற இந்து கோவில் நிர்வாகங்கள் தடை விதித்துள்ளன. குறிப்பிட்ட கரன்சி நோட்டின் மீது தடவப்பட்டுள்ள கொழுப்பு படிமத்தை அகற்ற வேண்டும் என்று கோரி 50 ஆயிரத்திற்கும் அதிகமான இந்துக்கள் இங்கிலாந்து அரசுக்கு கையெழுத்து இயக்கம் நடத்தி, மனு அளித்துள்ளனர்.
பேங்க் ஆப் இங்கிலாந்து, பிரிட்டனின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் படத்துடன் கூடிய, 5 பவுண்ட் புதிய கரன்சியை, இந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த கரன்சி மீது கொழுப்பு தடவப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
காணிக்கை வேண்டாம்:
இதைத் தொடர்ந்து, இங்கிலாந்து, லீசெஸ்டரில் உள்ள ஸ்ரீ சனாதன் மந்திர் நிர்வாகம், மிருக கொழுப்பு தடவப்பட்டுள்ளதால், 5 பவுண்ட் கரன்சி நோட்டுக்களை காணிக்கையாக செலுத்த வேண்டாம் என்று அறிவித்துள்ளது. பேங்க் ஆப் இங்கிலாந்து, மிருக கொழுப்பால் உருவாக்கப்பட்ட பாலிமெர் துகள்கள் 5 பவுண்ட் கரன்சி மீது தடவப்பட்டுள்ளதை ஒப்புக் கொண்டுள்ளது.
இப்பிரச்னை குறித்து ஸ்ரீ சனாதன் மந்திரின் தலைவர் விபூதி ஆச்சார்யா கூறுகையில், ‛பேங்க் ஆப் இங்கிலாந்தின்‛ இந்த நடவடிக்கை, இந்துக்களை அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது. உயிர் வதை கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பாக இருக்கும் இந்து மத பிரிவினர், பேங்கின் இந்த செய்கையினால் கோபம் அடைந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
லீசெஸ்டரில் ஏராளமான இந்துக்கள் வசிக்கின்றனர். அங்குள்ள ஸ்ரீ சனாதன் மந்திர், இங்கிலாந்தில் உள்ள மிகப் பெரிய இந்து கோவிலாகும். இந்நிலையில், 5 பவுண்ட் கரன்சியில் உள்ள கொழுப்பு படிமத்தை நீக்க நடவடிக்கை எடுக்க கோரி, 50 ஆயிரம் இந்துக்கள், கையெழுத்து இயக்கம் நடத்தி, இங்கிலாந்து அரசுக்கு மனு செய்துள்ளனர்.
English Summary:
London: UK Government's new 5 pound currency note issued since the animal fat applied donated them to get the banned Hindu temple administrations.
The Bank of England, Britain's former Prime Minister Winston Churchill with the film, and 5 pounds of new currency, is introduced in September this year. The currency is alleged to applied on the fat.