'நடா' புயல் கரையைக் கடக்கவுள்ள நிலையில், சென்னை உள்பட 5 மாவட்ட பள்ளிகளுக்கு வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்களும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகளை கல்வித்துறையும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களும் வெளியிட்டுள்ளனர்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள நடா புயல் கடலூருக்கு அருகில் டிசம்பர் 2-இல் கரையைக் கடக்கும் என்று கருதப்படுகிறது. இந்த புயலால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாள்களும் விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், விழுப்புரத்தில் உள்ள மரக்காணம், வானூர் ஆகிய தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம்: வியாழக்கிழமை (டிச.1) நடைபெறவிருந்த பொறியியல் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழக அறிவித்துள்ளது.
English Summary : 'Nada' in the face of the storm to cross the coast, including Chennai for 5 district schools Thursday, Friday granted two days off. Education department issued notices to the concerned District atciyarkalum.