புதுடில்லி: உ.பி., உள்ளிட்ட ஐந்து மாநிலங்களும், மத்திய அரசும், சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன், தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்த தயாராக இருக்கும்படி, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.
சட்டசபை தேர்தல்:
உ.பி., - உத்தரகண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு, அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இது தொடர்பாக, மத்திய அமைச்சக செயலருக்கும், இம்மாநிலங்களின் தலைமை செயலர்களுக்கும், தேர்தல் கமிஷன் அனுப்பியுள்ள கடித விபரம்: ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் அறிவிப்பை, தேர்தல் கமிஷன் வெளியிட உள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்த, மாநில அரசுகளும், மத்திய அரசும், தயார் நிலையில் இருக்க வேண்டும்.
நடத்தை விதிகள் :
பொது இடங்களை முறைகேடாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்; அரசு வாகனங்களை, தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தக் கூடாது. அரசு இணையதளங்களில், அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்பட வேண்டும். கட்சிகளின் தேர்தல் விளம்பரங்களுக்கு, அரசு நிதியை பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
English summary:
UP, the five states, including the Federal Government, with the announcement of assembly elections, to prepare to implement the election code of conduct, the Election Commission is advised.