கோல்கட்டா:500 , 1000 ரூபாய் நோட்டுக்கள் ஒழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு மம்தா தனது புத்தியை இழந்து விட்டார் என்று மேற்கு வங்க மாநில பா.ஜ., தலைவர் கூறியுள்ளார். நாட்டில் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார். இதற்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்..
இது தொடர்பாக டில்லி மற்றும் பீகார் சென்று ஆதரவு திரட்டினார். இதுகுறித்து அம்மாநில பா.ஜனதா தலைவர் திலிப் கோஷ், இந்த அறிவிப்புக்குப் பின் மம்தா புத்தியை இழந்து விட்டார் என்று கூறியுள்ளார்.
பா.ஜனதா இளைஞர் அணி ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சில் திலிப்கோஷ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் ''மோடியின் ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை மூலம் மம்மா பானர்ஜி கோடிக்கணக்கான பணத்தை இழந்து புலம்புகிறார்.
புத்தி இழப்பு:
ஏன் அவர் டில்லி மற்றும் பாட்னா சென்றார். அங்கு சென்ற அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அதனால் தலைமை செயலகத்திற்குள் சென்று உட்கார்ந்து கொண்டார். நாங்கள் என்ன நினைக்கிறோம் என்றால், இறுதியில் அவர் கங்கையில் குதிக்கலாம். அவர் தனது புத்திய இழந்துவிட்டார். புத்தியை இழந்த அவரை நாங்கள் பார்க்க தயாராக இல்லை'' என்றார். திலிப் கோஷ்.
English Summary:
KOLKATA: 500, 1000 notes after eradication operation, Mamata lost her sense that the West Bengal state BJP leader said. To combat the black money in the country, Modi announced Rs 500 and 1000 notes that annulled the action. Most of the opposition parties are expressing strong opposition