சென்னை : தற்போது கைதான 7 மீனவர்கள் உட்பட, இலங்கை சிறையில் உள்ள 22 தமிழக மீனவர்களையும், அவர்களின் வாழ்வாதாரமாக உள்ள 109 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசுடன், வெளியுறவுத்துறை அமைச்சகம் பேசுவதற்கு தாங்கள் (பிரதமர் ) நேரிடையாக இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு நேற்று தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,
7 மீனவர்கள் கைது:
தமிழகத்தில் இருந்து சென்ற இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்துச்சென்ற மற்றொரு நிகழ்வை தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறேன். தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தின் கோட்டைப்பட்டிணம் பகுதியில் இருந்து 7 மீனவர்கள் எந்திர படகில் மீன் பிடிக்கச்சென்றனர். 20-12-2016 அதிகாலையில் இலங்கை கடற்படையினர் அவர்களை பிடித்து, காரை நகருக்கு கொண்டு சென்று, பின் அங்கு அவர்களை சிறையில் வைத்துள்ளனர்.
நிரந்தர தீர்வு காண வேண்டும்:
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் பிடித்துச்செல்லப்படுவது, துரதிர்ஷ்டவசமானது. பாரம்பரிய மீன்பிடி நீர் எல்லை குறித்து இந்தியா - இலங்கை மீனவர்கள் அளவிலும், இரு நாடுகளின் அமைச்சக அளவிலும் பேச்சுவார்த்தை நடந்து வரும் போது, இது போன்று இந்திய மீனவர்கள் பிடித்துச்செல்லப்படுகிறார்கள். தமிழக கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் வாழ்க்கை மற்றும் வாழ்வாதரத்திற்கு பாக் வளைகுடாவில் பாரம்பரிய நீர் பகுதியில், நமது மீனவர்கள் மீன் பிடிக்கிறார்கள். ஆனால் இலங்கை கடற்படை தொடர்ந்து தமிழக மீனவர்களை பிடித்துச்செல்கிறது. நமது மீனவர்கள் சந்தித்து வரும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது. இலங்கைக்கு தாரை வார்த்த கச்சத்தீவை மீட்டெப்பதன் மூலம் நமது மீனவர்கள் பாரம்பரிய நீர் பகுதியில் சுதந்திரமாக மீன் பிடிக்க முடியும். சர்வதேச கடல்சார் எல்லை கோடு (ஐ.எம்.பி.எல்) விவகாரம தற்போது சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது.
இலங்கைக்கு வலியுறுத்த வேண்டும்:
தற்போது இந்திய மீனவர்கள் தாக்கப்படும் நிலையை உடனடியாக நிறுத்த வேண்டும் என இலங்கைக்கு, இந்திய அரசு கண்டிப்பான செய்தியை அனுப்ப வேண்டும். ஏழை மற்றும் அப்பாவி தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளது. தமிழக மீனவர்கள் பாக் வளைகுடாவில் தங்களது பாரம்பரிய நீர் எல்லை பகுதியில் மீன்பிடித்து வருகிறார்கள். அந்த மீனவர்களை பாதுகப்பதில் இந்திய அரசு உறுதியாக உள்ளது என்பதையும், இலங்கைக்கு இந்தியா உறுதியான தெளிவான, மாறு பாடில்லாத செய்தியை அனுப்ப வேண்டும்.
பிரதமர் தலையிட வேண்டும்:
இன்று (நேற்று) பிடித்துச்சென்ற இரு படகுகள் உள்பட இதுவரை 109 மீன்பிடி படகுகளை இலங்கை பிடித்து வைத்துள்ளது. இன்னும் அந்த படகுகளை அந்த நாட்டு அரசு விடுவிக்கவில்லை. இதனால் நமது மீனவர்கள் பெரும் மன புழுக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். வாழ்வாதாரம் இல்லாமல் இந்த மீனவர்கள் தற்போது நம்பிக்கை இழந்த நிலையில் உள்ளனர். இவ்விவகாரத்தில் நீங்கள் (பிரதமர் ) நேரடியாக தலையிட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் இலங்கை நிர்வாகத்துடன் பேசி தற்போது கைது செய்யப்பட்டுள்ள 7 மீனவர்கள் உட்பட இலங்கை சிறையில் உள்ள 22 மீனவர்களையும், 109 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.
English Summary:
Chennai: Currently arrest 7, including fishermen in Sri Lankan jails 22 Indian fishermen and their livelihood in the 109 fishing boats freed immediately with Sri Lankan Government, Ministry of Foreign Affairs to talk to (Prime Minister) directly to this issue, to intervene as the Prime Minister yesterday, Chief Minister opannircelvam wrote.