ஆமதாபாத்: 700 பேர் மூலம் கறுப்பு பணத்தை மாற்றிய பலே பைனான்ஸியரை சி.பி.ஐ., மற்றும் வருமான வரித்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ரகசிய கண்காணிப்பு:
மத்திய அரசின் பழைய 500, 1000 செல்லாது என அறிவிக்கப்பட்டது முதல் பண முதலைகள், கறுப்பு பணம் பதுக்கியவர்கள் எந்த வழியிலாவது கறுப்பை வெள்ளையாக்க மாற்ற முயற்சித்தனர். இது தொடர்பாக சட்டத்திற்கு புறம்பாக பணம் மாற்றியவர்கள் குறித்து ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்த பிரபல பைனான்ஸியர் கிசோர் பாஜியாவாலா என்பவர் தம்மிடம் இருந்த பல கோடி பணத்தை தனக்கு வேண்டியவர்கள்மூலம் 700 வங்கி கணக்கில் பணத்தை தலா ஒருவருக்கு 2 லட்சம் முதல் 4 லட்சம் வரை டிபாசிட் செய்துள்ளார். இதற்கு உள்ளூர் கூட்டுறவு வங்கியும் துணை போய் இருக்கிறது. ரூ.10 கோடியே 45 லட்சம் இது போல் கறுப்பை வெள்ளையாக்க முயற்சித்துள்ளது தெரியவந்துள்ளது.
27 வங்கி கணக்குகள் :
மேலும் அவரிடம் இருந்து ரூ. ஒரு கோடியே 45 லட்சத்து 50 ஆயிரத்து 800 ரூபாய் புதிய கரன்சி நோட்டுகளும், ஒரு கோடியே 50 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே இவருக்கு 27 வங்கி கணக்குகள் இருப்பதாகவும், இதில் 20 பேர் பினாமி கணக்கில் வைத்துள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
English summary:
AHMEDABAD: CBI Bale painansiyar changing money-laundering by 700 people, and the Income Tax authorities are investigating.